கோவை மாவட்ட ராமநாதபுரம் கிளை பொதுக்குழுக்கூட்டம்
தோழர்களே !!
21/01/2026 அன்று இராமநாதபுரம் கிளை பொதுக்குழுக்கூட்டம் கிளைத் தலைவர் Com. G. பாரதி அவர்கள் தலைமையில் 25 தோழர்கள் கலந்து கொண்ட கிளை கூட்டம் நடைபெற்றது. தலைமையுரைக்கு பின், கிளை செயலர் தோழர் லியோ பிரான்சிஸ் அனைவரையும் வரவேற்று துவக்கவுரையாற்றினார்.
மாவட்ட செயலர் தோழர். குடியரசு இன்றைய சூழலில் நமது நிலைப்பாடு பற்றி எடுத்துரைத்தார். தொடர்ந்து கோவையில் நடைபெற்று முடிந்த 5வது அகில இந்திய மாநாட்டில் அகில இந்திய துணைச் செயலாளராக தேர்வு செய்தமைக்கு கிளை சங்கத்தின் சார்பாக கதர் ஆடை கிளைத் தலைவர் தோழர் பாரதி அணிவித்து பாராட்டி கௌரிவிக்கபட்டார்.
கிளை பொருளாளர் தோழர். நாகராஜன் அகில இந்திய மாநாட்டின் நிதி வசூல் விபரம் அளித்தார். தோழர்கள் N P ராஜேந்திரன் மற்றும் C. ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக தோழர். மு. நாகராஜன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
A.குடியரசு மாவட்ட. செயலாளர் கோவை மாவட்டம்



0 Comments