சிறப்பாக நடைபெற்ற AIBDPA புதுச்சேரி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
அனைவருக்கும் வணக்கம்.
இன்று 03.12.25 புதுச்சேரி மாவட்டத்தின் இணைந்த பொதுக்குழு கூட்டம் வில்லியனூர் கிளை இணைத்து காலை 11 மணியளவில் மாவட்ட தலைவர் தோழர். V. ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக அஞ்சலி உரையை தோழர். T. கலியபெருமாள் அவர்கள் வாசிக்க ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து நடைபெற உள்ள ஐந்தாவது அகில இந்திய மாநாட்டிற்கான சார்பாளர்கள் மற்றும் பார்வையாளர் தேர்வு நடைபெற்றது. அதில் வில்லியனூர் கிளைச் செயலாளர் தோழர். D. மோகன் மற்றும் M. பாலசுப்பிரமணியன் மாவட்ட பொருளாளர் ஆகியோர் சார்பாளர்களாகவும் பார்வையாளராக மாவட்ட சங்கத்தின் உதவித்தலைவர் தோழர். P. சக்திவேல் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் அகில இந்திய மாநாட்டிற்கான நன்கொடை நிலுவை பற்றியும் மாநில சங்கம் நமக்கு அளித்த இலக்கான ரூபாய் 100000/- பூர்த்தி செய்யும் நிலையில் உள்ளதையும் தெரிவிக்கப்பட்டு மீதமுள்ள தோழர்களிடமும் அணுகி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.
வரும் 11.12.25 அன்று K G போஸ் நினைவு தினத்தை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்துடன் இணைந்து நடத்துவது எனவும் ஆலோசிக்கப்பட்டது. FCPA அதாவது ஃபோரம் ஆஃப் சிவில் பென்சனர் அசோசியேசன் சார்பில் விடுக்கப்பட்டுள்ள போராட்ட அறைகூவல்களை வரும் 17.12.25 மற்றும் 09.01.26 இல் நடைபெற உள்ள நிகழ்வுகளில் நமது AIBDPA சார்பாக கலந்து கொள்வதின் அவசியம் பற்றியும் கூறப்பட்டது.
மேலும் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கி டிசம்பர் 28 வரை ஒவ்வொரு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர்களை நேரடியாக சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம் எனவும் பதிவு செய்யப்பட்டது.
இறுதியாக ஓய்வு பெற்ற தோழர், தோழியர்களுக்கு அடையாள அட்டை மாவட்ட சங்கத்தின் மூலமாக ஏற்பாடு செய்தல் என்ற செய்தியோடு கூட்டம் நிறைவு பெற இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர் M. பாலசுப்பிரமணியன் அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
தோழமையுடன்
V. ராமகிருஷ்ணன்
மாவட்ட செயலர்
புதுச்சேரி மாவட்டம்.
##################.




0 Comments