Latest

10/recent/ticker-posts

சென்னை CGM அலுவலக மாவட்ட செயற்குழு & சங்க அமைப்பு தின விழா

 சென்னை CGM அலுவலக மாவட்ட செயற்குழு & சங்க அமைப்பு தின விழா







தோழர்கள் அனைவருக்கும் வணக்கம் !!!

சென்னை CGM அலுவலக மாவட்ட செயற்குழு மற்றும் AIBDPA சங்க அமைப்பு தின ஆண்டு விழா அனுசரிப்பு  ஆகிய நிகழ்வுகள் 31-10-2025 அன்று காலை 11.15 மணிக்கு மாவட்டத் தலைவர் தோழர். பெர்லின் கனகராஜ் தலைமையில் BSNL ஊழியர் சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சங்கம் தொடங்கப்பட்ட நாள் 21.10.2009 முதல் 16 ஆண்டு கால சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்தும், நூறாண்டுகளுக்கு மேலான KG போஸ் அணியின் வழி வந்த சங்க பாரம்பரியம், மற்றும் இயக்க வரலாறு குறித்தும் அனைவராலும் நினைவு கூர்ந்து பாராட்டப்பட்டு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.  சங்க செயல்பாடுகள் குறித்த செயல்பாட்டு அறிக்கை மாவட்ட செயலாளர் தோழர். சிரில் ராஜ் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

           நமது மாநில செயலாளர் தோழர்ழ. R. ராஜசேகர் தமது சிறப்புரையில் AIBDPA உருவான வரலாறு, 16 ஆண்டு கால சாதனைகள், நடத்திய இயக்கங்கள், ஓய்வூதியர் பொது பிரச்னைகள், தனி நபர் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் சங்கத்தின் அணுகுமுறை, இவற்றின் காரணமாக அதிகரித்து வரும் உறுப்பினர் எண்ணிக்கை உள்ளிட்ட ஏராளமான செய்திகளையும், கருத்துக்களையும் விரிவாக எடுத்துரைத்தார். டிசம்பர் 17, 18 தேதிகளில் நடக்கவிருக்கின்ற அகில இந்திய மாநாட்டு பணிகள் பற்றியும், மத நல்லிணக்கம் தொடர்பாக வெவ்வேறு தலைப்புக்களில் தமிழகத்தின் நான்கு மைய பகுதிகளில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், மாநாட்டு கொடிகள், மற்றும் ஜோதி பயணங்கள், 8வது ஊதியக்குழு ஆகிய கருத்துக்களை உள்ளடக்கி மிக தெளிவான சிறப்புரையாற்றினார். 

                  அதை தொடர்ந்து நமது மாநில ஆலோசகர் தோழர். சி. கே. நரசிம்மன் மற்றும் மாநில அமைப்பு செயலாளர் தோழர். ஜாபர் முகமது ஆகியோர் மாவட்ட செயற்குழுவையும், சங்க அமைப்பு தின ஆண்டு விழா நிகழ்வையும் வாழ்த்தி பேசினர். பின்னர் மாநாட்டு நிதி நிலைமை பற்றிய விவாதங்களோடு, மாவட்ட பொருளாளர் தோழர் மகாலிங்கம் நன்றி கூற செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது. 


தோழமையுள்ள

R. சிரில் ராஜ் 

மாவட்ட செயலாளர் 

CGM(O) சென்னை.

Post a Comment

0 Comments