Latest

10/recent/ticker-posts

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளையின் பொதுக்குழு கூட்டம்

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளையின் பொதுக்குழு கூட்டம்


தோழர்களுக்கு வணக்கம் !

                        இன்று 30/10/25 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கோவில்பட்டி கிளையின் பொதுக்குழு கூட்டம் மந்தி தோப்பு ரோட்டில் உள்ள (புனித ஓம் கான்வென்ட் எதிர்புறம்) பாரதி இல்லத்தில் வைத்து கிளைத் தலைவர் தோழர். R. மகேந்திரமணி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அஞ்சலி உரையினை மாவட்ட உதவிச் செயலர் தோழர். K. சுப்பையா நிகழ்தினார். அதனை தொடர்ந்து கிளைச் செயலாளர்தோழர்.எஸ். ஆறுமுகம் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றார். 

              தூத்துக்குடி AIBDPA மாவட்டச் செயலாளர் தோழர்.P. ராமர் கூட்டத்தை துவக்கிவைத்து துவக்க உரை ஆற்றியதோடு உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கும் கோவையில் நடைபெற உள்ள 5வது அகில இந்திய மாநாட்டிற்கு வழங்க வேண்டிய நிதி விபரங்களை கூறி அதனை வழங்கிட கூறினார். தொடர்ந்து மாவட்ட உதவிச் செயலர் தோழர். K.கோலப்பன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மேலும் கிளையில் தேங்கி உள்ள பிரச்சனைகளை தொகுத்து கூறி விரைவில் தீர்த்திட ஆலோசனை வழங்கினார்.

                      இந்த பொதுக்குழு கூட்டத்தில் அகில இந்திய உதவித் தலைவர் AIBDPA தோழர். S. மோகன்தாஸ் அவர்கள் கலந்து கொண்டு டெல்லி பேரணி, கோவை 5வது அகில இந்திய மாநாடு விபரங்களை விரிவாக கூறியதோடு விரைவில் வர உள்ள இந்திய தேர்தல் ஆணையம்   ஓட்டர்கள் சரிபார்ப்பு பணியின் விபரங்களையும் எடுத்துரைத்தார்.

 நிறைவாக கிளைத் தலைவர் தோழர். R. மகேந்திரமணி அவர்கள் நனறி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

 இப்படிக்கு
தோழமையுடன்
 எஸ் ஆறுமுகம் 
கிளைச் செயலாளர் AIBDPA 
கோவில்பட்டி கிளை 30/10/25.

Post a Comment

0 Comments