அகில இந்திய மாநாட்டிற்கு தனிநபர் நன்கொடை ₹ 100000/-(ஒரு இலட்சம்) - வாழ்த்துகிறோம் !! வணங்குகிறோம் !!
கோவை மாவட்ட சங்க உறுப்பினர் தோழர் ஆரவல்லி ஆறுமுகம் குடும்பத்தார் அகில இந்திய மாநாட்டிற்கு நன்கொடையாக 01.11.25 அன்று கோவை மாவட்ட சங்கத்திடம் மாநிலச் செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னணியில் கோவை மாவட்ட சங்கத்திடம் தொண்டர்கள் பணிக்குழு கூட்டத்தில் ₹ 100000/-(ஒரு இலட்சம்) வழங்கியுள்ளனர். தோழர் ஆறுமுகம் GOVT.PRESS OF INDIA மத்திய அரசு நிறுவனத்தில் பல்லாண்டு காலம் சங்கத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்டு ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோழர் ஆறுமுகம் அவர்கள் காசோலை வழங்கிய பிறகு தொழிலாளி வர்க்கத்திற்காக போராடும் இந்த சங்கத்தின் மாநாட்டை வெற்றி பெறச் செய்ய நாம் அனைவரும் இணைந்து செல்வோம் என்று தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
இடதுசாரி சிந்தனை உள்ள இந்த குடும்பத்தார் வாழும் வரை மனித குலம் தழைக்க, தொழிலாளி வர்க்கத்துக்காக வாழ்ந்த பின்பு மனிதகுலம் படிப்பிற்காக தோழர் சீதாராம்யெச்சூரி அவர்களின் நினைவு நாளில் ஆரவல்லி மற்றும் அவரது கணவன் இருவரும் உடல் தானம் செய்தது பாராட்டுக்குரியது. ரூபாய் ஒரு இலட்சம் நன்கொடை வழங்கிய குடும்பத்தாருக்கு வணக்கத்தையும் வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்குகிறது கோவை மாவட்டம்.
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம் .





0 Comments