Latest

10/recent/ticker-posts

AIBDPA திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் !!

 AIBDPA திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம்








வணக்கம் தோழர்களே...!!!

                 01-11-2025 சனிக்கிழமை காலை 10 மணியளவில், தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கட்டிடம் (CITU) ஒன்றாவது வடக்குத் தெரு, (Near Anbunagar Railway Gate) தியாகராஜநகர், பாளயங்கோட்டையில் நமது நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டத் தலைவர்  தோழர்.  M. கனகமணி, தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தோழர். S. சங்கரநாராயணன் அஞ்சலி உரையாற்றினார்.

   மாவட்ட செயலாளர் தோழர். S. முத்துசாமி வரவேற்புரையாற்றினார். அகில இந்திய உதவி பொருளாளர் தோழர். V. சீதாலட்சுமி, மற்றும் மாநில உதவி தலைவர், AIBDPA, மாவட்டச் செயலாளர் NCCPA மற்றும் FCPA கமிட்டி உறுப்பினர் தோழர். S.நடராஜா சிறப்புரையாற்றினர். BSNLEU மாவட்ட செயலாளர், தோழர். NSMAV மற்றும் TNTCWU மாவட்ட செயலாளர் தோழர். P. ராஜகோபால் வாழ்த்துரை வழங்கினர்.

            அமைப்பு நிலை விவாதத்தில் திருநெல்வேலி கிளைச் செயலாளர் தோழர். S. செல்லத்துரை, பாளையங்கோட்டை கிளைச் செயலாளர் தோழர். P.சூசை, வள்ளியூர் கிளைச் செயலாளர் தோழர். A.பிச்சுமணி, அம்பாசமுத்திரம் கிளைச் செயலாளர் தோழர். S. P. கணேசன், சங்கரன்கோவில் கிளைச் செயலாளர் தோழர் D. கிறிஸ்டோபர் ராஜதுரை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர். R. M. கிறிஸ்டோபர், தோழர். R.ராமநாதன், நமது மாவட்ட தணிக்கையாளர் தோழர். M. முத்தையா ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்தை பதிவு செய்தனர்.

                  செயல்பாட்டு அறிக்கை பற்றி மாவட்ட செயலாளர் தோழர் S. முத்துசாமி விளக்கமளித்தார். நிதிநிலை அறிக்கை பற்றி மாவட்ட பொருளாளர் தோழர். S. சங்கரநாராயணன் கூறினார். இரண்டும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 10-10-2025 அன்று டெல்லி பேரணியில் கலந்து கொண்ட தோழர். S. கணேசன், தோழர். S.செல்லத்துரை மற்றும் தோழர். S.வேலுச்சாமி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தியும் தலா ரூபாய் 500/=ம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

             நமது அகில இந்திய மாநாடு சிறப்பாக நடைபெற நல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் மாநில சங்கம் வேண்டுகோளின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் கருத்தரங்கம் நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயற்குழுவில் ரூபாய் 50000/= (ரூபாய் ஐம்பது ஆயிரம்) தோழர்கள் நன்கொடை வழங்கினர்.

              மாவட்ட உதவி தலைவர்&மாநில தணிக்கையாளர் தோழர். R. ராமநாதன் நன்றி கூறினார்.

தோழமையுடன்,
ச. முத்துசாமி,
மாவட்ட செயலாளர்,
AIBDPA,
திருநெல்வேலி மாவட்டம்.
01-11-2025.

Post a Comment

0 Comments