ஈரோடு மாவட்டம் கொடுமுடி கிளை பொதுக்குழு கூட்டம்
அன்பு தோழர்களே !!
ஈரோடு மாவட்டம் கொடுமுடி கிளை பொதுக்குழு கூட்டம் 05/11/2025 காலை 10 மணிக்கு கிளை தலைவர் தோழர். குழந்தைசாமி DE (Rtd) அவர்கள் தலைமையில் கொடுமுடி எக்சேஞ்ச்சில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. வரவேற்புரையாக தோழர். N. சுப்பிரமணியன் கிளைச் செயலாளர் வரவேற்புரை யாற்றினார்.
சிறப்புரை தோழர் N குப்புசாமி மாநில உதவி தலைவர் அவரதம் உரையில் இன்றைய இந்திய சூழல், அகில இந்திய சங்கத்தினுடைய நிலைப்பாடு, மாநில சங்க நிலைப்பாடு நாம் ஆற்ற வேண்டிய கடமை அகில இந்திய மாநாட்டை ஏன் சிறப்பாக நடத்த வேண்டும் அதில் நம்முடைய பங்கு என்ன என்பது சம்பந்தமாக ஒரு சிறப்பான உரையை நிகழ்த்தினார்.
தோழர். வே. மணியன் மாவட்ட செயலாளர் நமது மாவட்டத்தில் நடத்தி இருக்கக்கூடிய போராட்டங்கள் சம்பந்தமாகவும் அகில இந்திய மாநில சங்கங்களின் கொடுத்த அறைகூவல் போராட்டத்தை நாம் எவ்வாறு ஊழியர்களை திரட்டி வெற்றியாக நடத்தினோம் என்பதை சம்பந்தமாகவும் ஊழியர்களுடைய பிரச்சனையை நமது சங்கம் எடுத்த நிலை சம்பந்தமாகவும் உரை நிகழ்த்தினார்.
தோழர். முகமது ரஃபிக் மாவட்ட உதவி செயலாளர், கிளைச் சங்கத்தினுடைய செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற அளவில் வாழ்த்துரை வழங்கினார்கள். 15 மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். அகில இந்திய சங்க நிதியாக ரூபாய் 18000 வசூல் செய்யப்பட்டது. அகில இந்திய மாநாட்டின் நிதி வழங்கிய கொடுமுடி தோழர்களின் உணர்வுகளை கொடுமுடி கிளை மனதார பாராட்டுகிறது.
N சுப்பிரமணியன் கிளைச் செயலாளர்
05/11/2025



0 Comments