AIBDPA ஈரோடு மாவட்ட அந்தியூர் கிளை பொதுக்குழு கூட்டம்.
அன்பார்ந்த தோழர்களே!
நமது கிளைப் பொதுக்குழுக் கூட்டம் 04.11.2025 செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் அந்தியூர் தொலைபேசி நிலையத்தில் கிளைத் தலைவர் தோழர். V. சுப்பிரமணியன் தலைமையில் ஆரம்பமானது. பொதுக் குழுவில் 2- பெண்கள் உட்பட 35 தோழர்கள் பங்கேற்றது சிறப்பு அம்சமாகும். சங்கக் கொடியை தோழர். N. குப்புசாமி அவர்கள் விண்ணைப்பிளக்கும் முழக்கங்களிடையே ஏற்றிவைத்தார். தோழர். மாதையன் முன்னாள் கிளைச்செயலர் தியாகிகளுக்கு அஞ்சலியுரையாற்றினார். கிளைச்செயலர் தோழர்.OP.பழனிச்சாமி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
பின்பு தோழர். N.குப்புசாமி CVPஅவர்கள் மத்திய அரசின் கொள்கைகள் தொழிலாளர்களின் போராட்டங்கள் என்ற தலைப்பிலும், தோழர். L. பரமேஸ்வரன் ACS அவர்கள் 5-வது அகில இந்திய மாநாடும் நமது கடமைகளும் என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினர். அதோடு மாநாட்டிற்கான ஏற்பாடுகள், மண்டபம், தங்குமிடம், சாப்பாடு, மொழிபெயர்ப்பு ஏற்பாடு, மாநாட்டில் ஏற்றப்படும் கொடி, ஜோதி பயணங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளை மிக உற்சாகமாக எடுத்துரைத்துடன், நன்கொடைகளை தாராளமாக வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இருவரது வேண்டுகோளையும் ஏற்றுகொண்ட தோழர்கள் மாநாட்டிற்கான நிதியினை வாரி வழங்கினர். அந்தியூர் கிளைக்கு கோட்டாவாக மாவட்டச்சங்கம் 40ஆயிரம் நிர்ணயம் செய்தது. தோழர்கள் ரூபாய் 62 ஆயிரத்தை வாரிவழங்கி அசத்தினார்கள். பொதுக்குழுவை வாழ்த்தி BSNLEU மாநில உதவித்தலைவர் K.கிட்டுச்சாமி' AIBDPA மாவட்ட உதவிச்செயலர் L.பழனிச்சாமி, N.லோகநாதன் DOS, தோழர். P.முத்துராமலிங்கம் Ex ADS ஆகியோர்பேசினார்கள்.
நன்கொடை வழங்கிய தோழர்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்கிய அனைவருக்கும் மாநில/மாவட்ட /கிளை சங்கங்களின் சார்பாக நன்றி! நன்றி! நன்றி.
V.சுப்பிரமணியன் தலைவர்
O.P.பழனிச்சாமி செயலர்
A.தில்லைவேல் பொருளர்.




0 Comments