AIBDPA திருநெல்வேலி மாவட்ட அவசர செயற்குழு கூட்டம்
வணக்கம் தோழர்களே...!!!
26-11-2025 புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில், தோழர் V. S. வேம்பு ராஜா நினைவு அரங்கம், BSNLEU அலுவலகம், வண்ணார்பேட்டையில் நமது நெல்லை மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் தோழர். M. கனகமணி, தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தோழர். S. சங்கரநாராயணன் அஞ்சலி உரையாற்றினார். மாவட்ட உதவி செயலாளர் தோழர். R. M. கிறிஸ்டோபர் வரவேற்புரையாற்றினார். மாநில உதவி தலைவர், தோழர். S.நடராஜா துவக்கவுரையாற்றினார். அகில இந்திய உதவி பொருளாளர் தோழர். V. சீதா லட்சுமி சிறப்புரையாற்றினர். BSNLEU மாவட்ட செயலாளர், தோழர் NSMAV மற்றும் TNTCWU மாவட்ட செயலாளர் தோழர். P. ராஜகோபால் வாழ்த்துரை வழங்கினர்.
ஆய்படுபொருள் பற்றி மாவட்ட செயலாளர் தோழர் S.முத்துசாமி விளக்கவுரையாற்றினார். அகில இந்திய மாநாட்டு சார்பாளர்கள்/பார்வையாளர்கள் தேர்வு பற்றி திருநெல்வேலி கிளைச் செயலாளர் தோழர். S. செல்லத்துரை, பாளையங்கோட்டை கிளைச் செயலாளர் தோழர். P.சூசை, வள்ளியூர் கிளைச் செயலாளர் தோழர். A.பிச்சுமணி, அம்பாசமுத்திரம் கிளைச் செயலாளர் தோழர். S. P. கணேசன், சங்கரன்கோவில் கிளைச் செயலாளர் தோழர். D.கிறிஸ்டோபர் ராஜதுரை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர். R. M. கிறிஸ்டோபர், தோழர் R.ராமநாதன், நமது மாவட்ட தணிக்கையாளர் தோழர். M.முத்தையா ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்தை பதிவு செய்தனர்.
1. தோழர் M.கனகமணி, மாவட்ட தலைவர்
2. தோழர் S.சங்கரநாராயணன், மாவட்ட பொருளாளர்
3.தோழர் R. M.கிறிஸ்டோபர், மாவட்ட உதவி செயலாளர் ஆகியோர்
தேர்வு செய்யப்பட்டனர்.
1.தோழர் N.சூசைமரிய அந்தோணி வியாகப்பன்
மற்றும்
2.தோழர் P.ராஜகோபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழுவில் தோழர் S.முத்துசாமி மாவட்டச் செயலாளர், தோழர் V. சீதாலட்சுமி அகில இந்திய உதவி பொருளாளர், தோழர் S. நடராஜா மாநில உதவி தலைவர் மற்றும் தோழர். R.ராமநாதன் மாநில தணிக்கையாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நிதிநிலை பற்றிய விபரங்களை மாவட்ட பொருளாளர் தோழர். S.சங்கரநாராயணன் கூறினார். நமது மாவட்டத்தில் இருந்து மாநாட்டிற்கு அல்வா வழங்குவதற்கு தோழர் R. ராமநாதன், DE(Rtd) மற்றும் தோழர் D.கிறிஸ்டோபர் ராஜதுரை JE (Rtd )ஆகியோர் தலா ரூபாய் 1000 கொடுத்து இருக்கிறார்கள். இன்னும் சில தோழர்கள் பணம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்கள்.
மாவட்ட உதவி தலைவர்&மாநில தணிக்கையாளர் தோழர். R. ராமநாதன் நன்றி கூறினார்.
ச. முத்துசாமி,
மாவட்ட செயலாளர்,
AIBDPA,
திருநெல்வேலி மாவட்டம்.
26-11-2025.




0 Comments