Latest

10/recent/ticker-posts

இணையவழி மாநில செயற்குழுக் கூட்டம்- 24 11 25

 AIBDPA TN சுற்றறிக்கை எண் 33/25* 

இணையவழி மாநில செயற்குழுக் கூட்டம்- 24.11.25

தோழர்களே !

                  நமது தமிழ் மாநிலச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் 24.11. 25 அன்று இணைய வழியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் தோழர் C.ஞானசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 17 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மத்திய சங்க நிர்வாகிகள், மாநிலச் சங்க நிர்வாகிகள் உட்பட 41 தோழர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருளடக்கம் :

1) அகில இந்திய மாநாட்டு நன்கொடை 

2) நடைபெற்றுள்ள  மாநாட்டு பணிகள் 

3) நடைபெற்று முடிந்த 4 மண்டல கருத்தரங்கங்கள் 

4) 11.12.25 அன்று நடைபெற இருக்கின்ற ஐந்து கொடிகள் ஏற்றும் நிகழ்ச்சி. 

5) ஜோதி, கொடி பயணங்கள் திட்டமிடல்

6) சார்பாளர்கள், பார்வையாளர்கள் எண்ணிக்கையை முடிவு செய்தல்.

7) 26.11.25 அன்று நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் .

மாநிலச் செயலர் தனது முன்னுரையில் முன்வைத்த பின்வரும் கருத்துகள் விவாதங்களுக்குப் பிறகு, ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

1) நன்கொடை நிலுவை வைத்துள்ள மாவட்டங்கள் உடனடியாக 30.11.2025க்குள் செலுத்த வேண்டும்; அனைத்து மாவட்டங்களும் நன்கொடைகளை முழுமையாக செலுத்தி விடவேண்டும். 

2) மாநிலச் செயலர் ராஜசேகர் மாநில பொருளாளர் தோழர். இளங்கோவன் அவர்கள் இருவரும் கடந்த 20 ஆம் தேதி கோவை சென்றிருந்தனர்.

சமையல்,  மேடை அலங்காரம், மண்டப அலங்காரம், கலைநிகழ்ச்சிகள், கண்காட்சி, ஒலி ஒளி ஏற்பாடு, ஆகியவை இறுதி செய்யப்பட்டிருக்கின்றன. 

கோவை தோழர்கள் சிறப்பான முறையில் மாநாட்டு பணிகளை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். கொடி, தோரணங்கள், தொண்டர்களுக்காக பனியன்கள், ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விருந்தினர்களுக்கு கொடுப்பதற்கான நினைவு பரிசும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

3) திருச்சி, பாண்டிச்சேரி, சேலம், மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற மண்டல கருத்தரங்கங்கள் எழுச்சியூட்டும் வகையில் நடைபெற்றிருக்கிறது.  18 மாவட்டங்களைச் சார்ந்த முன்னணி தோழர்களும், மாவட்டங்களில் இருக்கும் தோழர்களும், மிக சிறப்பான முறையில் கருத்தரங்கங்களில் பங்கு கொண்டுள்ளனர்.

           கருத்தரங்கங்களுக்கு ஏற்பாடு செய்த திருச்சி பாண்டி சேலம் திருநெல்வேலி மாவட்ட தோழர்களுக்கும் இதில் பங்கேற்ற அனைத்து மாவட்ட சங்க தோழர்களுக்கும் மாநிலச் சங்கம் தன்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

இது முதல் முயற்சி என்றாலும் மிக சிறப்பாக நடைபெற்று இருக்கிறது 

தோழர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள் 

4) அடுத்து டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி தோழர் K.G. போஸ் அவர்களுடைய நினைவு நாளன்று தமிழகம் முழுவதிலும் உள்ள 115 கிளைகளிலும் ஐந்து கொடிகள் ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடப்பதற்கு மாவட்டங்கள் திட்டமிட வேண்டும்.

கொடிகள் தேவைப்படும் மாவட்டங்கள் வரவேற்பு குழுவிடம் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.  கொடிகளை இலவசமாக அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.  ஒரு கிளைக்கு 5 கொடிகள் வீதம் அனுப்பப்படும். கூடுதலாக கொடிகள் தேவையெனில் விலைக்கு தரப்படும்.

5) அகில இந்திய மாநாட்டில் ஏற்றப்பட உள்ள தேசியக்கொடி வேலூர் மாவட்டத்தில் இருந்தும், சங்கக் கோடி திருமெய்ஞானம் கும்பகோணம் பகுதியிலிருந்தும், மதநல்லிணக்க ஜோதி நாகர்கோவில் கன்னியாகுமரி காந்தி சிலையில் இருந்து எடுத்து வரப்படும். 

இதற்கான திட்டமிடல்களை அந்தந்த மாவட்ட தோழர்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் வருகின்ற வழியில் இருக்கக்கூடிய மாவட்டங்கள் அவர்களுக்கான உதவிகளை செய்யவேண்டும். 

அது குறித்து முறையான திட்டமிடல்  நடைபெறும். 

6) சார்பாளர்கள் பார்வையாளர்கள் எண்ணிக்கை மாவட்டங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வரவேண்டும். வரவேற்பு குழுவில் பங்கேற்றுள்ள மாநில சங்க நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும், விருப்பப்பட்டால் சார்பாளர்களாகவும் கலந்து கொள்ளலாம். சார்பாளர்கள், பார்வையாளர்கள் கட்டணம் ரூபாய் 1500 அவசியம் செலுத்த வேண்டும். 

               பெண் தோழர்களை அதிக எண்ணிக்கையில் அழைத்து வர முயற்சிகள் எடுக்க வேண்டும். கூடுதலாக பெண்கள் பார்வையாளர்களாக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனுமதி உண்டு. எத்தனை தோழியர்கள் என்பதனை மாவட்ட சங்கங்கள் மாநிலச் சங்கத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். 

தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். அவர்களும் கட்டணம் 1500 கட்ட வேண்டும். 

7) முதல் நாள் பொது அரங்க நிகழ்ச்சியில் தோழர்கள் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து திரளாகக் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் தோழர்களுக்கு, 17 டிசம்பர் அன்று காலைக்கடன்களை முடிப்பதற்கும் காலை சிற்றுண்டி, மதிய உணவு மாநாட்டில் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். அந்த பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும். 

              இது நாம் நடத்தும் மாநாடு. நமது மாவட்ட தோழர்கள் திரளாக கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட சங்கங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். 

8 ) 26.11.25 அன்று ஒன்றிய பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை எதிர்த்து நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்ட இயக்கத்தில், COC விடுத்துள்ள அறைகூவலை வெற்றியடையச் செய்யவேண்டும். 

மேலும் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திலும் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

விவாதத்தில் 18 மாவட்ட செயலாளர்கள் உட்பட 25 தோழர்களும் மத்திய சங்க நிர்வாகிகள், தோழர் S.மோகன்தாஸ், தோழர்.V.வெங்கட ராமன், தோழியர் V.சீதாலட்சுமி உள்ளிட்ட மத்திய சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். இறுதியாக தோழர் A.இளங்கோவன் மாநில பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.


தோழமையுடன்,
R ராஜசேகர்,
மாநிலச் செயலாளர்
26.11.25

Post a Comment

0 Comments