சிறப்பாக நடைபெற்ற புதுச்சேரி கருத்தரங்கம்*
தோழர்களே !
வணக்கம். கடலூர், புதுச்சேரி, சென்னை மாவட்ட சங்கங்கள் இணைந்து நடத்திய 5வது அகில இந்திய மாநாட்டு சிறப்பு கருத்தரங்கம் புதுச்சேரியில் இன்று (15.11.2025) நடைபெற்றது.
மாவட்ட தலைவர்கள் தோழர்.V.ராமகிருஷ்ணன்(புதுச்சேரி), தோழர். N.மேகநாதன் (கடலூர்), தோழியர். பெர்லின் கனகராஜ் (சென்னை) கூட்டு தலைமையில் கடலூர் மாவட்ட செயலர் தோழர். I.M.மதியழகன் முன்னிலை வகுத்தார். புதுச்சேரி மாவட்ட செயலர் தோழர். V. ராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.
கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய மாநில செயலர் தோழர். R.ராஜசேகர் தனது உரையில், நடைபெறும் நமது அகில இந்திய மாநாட்டு நிகழ்வுகளை விளக்கியும், பென்சன் வேலிடேசன் மசோதாவை எதிர்த்து நாம் நடத்திய இயக்கங்களை விளக்கியும் உரையாற்றினார்.
மதச்சார்பின்மையை காப்போம், அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பொருளில் விரிவாக பேசிய மனிதம் அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர். S.G. ரமேஷ் பாபு தனது உரையில் இந்தியாவை ஆளும் பிஜேபி அரசின் நவ பாசிச நடவடிக்கைகள், அதை முறியடிக்க நாம் மேற்கொள்ளவேண்டிய பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
BSNL நிறுவனம் சந்திக்கும் சவால்கள், நாம் நடத்திய போராட்டங்கள், பென்சனை பாதுகாக்க நாம் நடத்திவரும் இயக்கங்களை நமது சங்க ஆலோசகர் தோழர். C.K நரசிம்மன் விரிவாக விளக்கி உரையாற்றினார்.
இறுதியில் சென்னை மாவட்ட செயலர் தோழர். R.சிரில்ராஜ் நன்றி கூறினார்.
கருத்தரங்கில் 40 புதுச்சேரி தோழர்களும், 40 கடலூர் தோழர்களும், சென்னையிலிருந்து 20 தோழர்களும் வேன் ஏற்பாடு செய்து கலந்து கொண்டனர். மிகச்சிறந்த முறையில் இடம், உணவு ஏற்பாடு செய்த புதுச்சேரி மாவட்ட தோழர்களுக்கு பாராட்டுக்கள். கருத்தரங்கில் கலந்து கொண்ட புதுச்சேரி, கடலூர், சென்னை தோழர்களுக்கு மூன்று மாவட்ட சங்கங்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
I.M.மதியழகன்-கடலூர்
V.ராமகிருஷ்ணன்-புதுச்சேரி
R.சிரில்ராஜ்-சென்னை
மாவட்ட செயலர்கள்.






0 Comments