AIBDPA TN சுற்றறிக்கை எண் 30/25*
இணைய வழி மாநிலச் செயற்குழுக் கூட்டம் 10.11. 2025
தோழர்களே,
நமது தமிழ் மாநிலச் சங்கத்தின் இணைய வழி மாநிலச் செயற்குழுக் கூட்டம் 10.11.25 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மாநிலத் தலைவர் தோழர் C.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலச் சங்க நிர்வாகிகள், மற்றும் மாவட்டச் செயலாளர்கள் 46 பேர் கலந்து கொண்டனர்.
ஆய்வு செய்யப்பட்ட பொருளடக்கம்
1) கோவை அகில இந்திய மாநாட்டின் தயாரிப்பு பணிகள்
2) அகில இந்திய மாநாட்டுக்கான நிதி வரவு நிலைமை.
3) மண்டல அளவில் நடைபெற உள்ள சிறப்பு கருத்தரங்கங்கள் குறித்த விளக்கங்கள்.
கூட்டத்தில் E3 நம்பூதிரி சங்கம், BSNL ஊழியர் சங்கம், AIBDPA இவற்றை தமிழ் மாநிலத்தில் கட்டமைத்த தலைவர்களில் ஒருவரான நெல்லை தோழர் V.S.வேம்பு ராஜா அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற CITU தமிழ் மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, தோழர். பி. இந்திரா அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
செயற்குழுவில் 16 மாவட்ட செயலாளர்கள் உட்பட 30 தோழர்கள் விவாதங்களில் பங்கேற்றனர்.
மத்திய சங்க நிர்வாகிகள் தோழர் S.மோகன்தாஸ், தோழர் V.வெங்கட்ராமன், தோழியர் V.சீதாலட்சுமி ஆகியோர் உரையாற்றினர்.
மாநிலச் செயலர் தோழர். R. ராஜசேகர் செயற்குழுவின் பொருளாய்வு குறித்து விரிவாகப் பேசினார். மாநிலப் பொருளாளர் தோழர். A.இளங்கோவன் அகில இந்திய மாநாட்டுக்கான நிதி வரவு குறித்தும், மாவட்ட வாரியாக வரவு வந்த தொகை குறித்தும் விளக்கமான அறிக்கை சமர்ப்பித்தார்.
அகில இந்திய மாநாட்டின் வரவேற்பு குழு செயல் தலைவர் தோழர். V. வெங்கட்ராமன், மற்றும் கோவை மாவட்டச் செயலாளர் தோழர். A.குடியரசு இருவரும் அகில இந்திய மாநாட்டுக்காக இதுவரை செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், இனி செய்யவிருக்கும் பணிகளுக்கான திட்டமிடல் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
திருநெல்வேலி, திருச்சி, பாண்டிச்சேரி மாவட்டச் செயலாளர்கள், சேலம் மாவட்டத்தின் சார்பாக மாநில சங்க நிர்வாகி தோழர் S.கோபால், ஆகியோர் அவர்களது பகுதியில் நடைபெற உள்ள விரிவடைந்த சிறப்பு கருத்தரங்கங்களின் ஆயத்தப் பணிகளை எடுத்தியம்பினர்.
விவாதங்களின் முடிவில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன
1) அகில இந்திய மாநாட்டிற்காக வழங்க வேண்டிய நிதி பாக்கி உள்ள மாவட்டங்கள் நவம்பர் 20க்குள் ஒரு பகுதியையும், நவம்பர் 30க்குள் முழுமையாகவும் வசூல் செய்து ஒப்படைப்பது.
2) திருநெல்வேலி, தூத்துக்குடி, குன்னூர் மாவட்டங்கள் அகில இந்திய மாநாட்டுக்கு பொருள் நன்கொடையாக டீத்தூள், ரஸ்க், அல்வா, கடலை மிட்டாய் ஆகியவற்றை வழங்க உள்ளதை மாநில செயற்குழு பாராட்டுகிறது. இது போல மற்ற மாவட்டங்களில் இருந்தும் தங்களால் ஆன பொருள் உதவிகளை வழங்க முயற்சி செய்ய வேண்டும், என மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
3) சார்பாளர்கள், பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் கொடி, ஜோதி பயணம் குறித்து அடுத்த செயற்குழுவில் முடிவு செய்வது.
4) 11.12.25 அன்று கேஜி போஸ் நினைவு தினத்தில் அனைத்து கிளைகளிலும் ஐந்து கொடிகள் ஏற்றும் நிகழ்வை நடத்துவது.
இறுதியாக மாநிலச் சங்க நிர்வாகி தோழர் பெர்லின் கனகராஜ் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
R ராஜசேகர்
மாநிலச் செயலாளர் AIBDPA,
தமிழ் மாநிலம்.
11.11.25
0 Comments