திருச்சியில் சிறப்பாக நடந்து முடிந்த சிறப்பு கருத்தரங்கம்.
15.11.2025 அன்று இரண்டு அமர்வுகளாக நடந்தது. கருத்தரங்கத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் தோழர். S. அஸ்லம்பாஷா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
முதல் அமர்வை மாநில உதவி செயலாளர் தோழர். S.ஜான் போர்ஜியா தலைமையேற்று நடத்தினார். "அரசியல் சாசனம் பாதுகாப்போம் !மதசார்பின்மை பாதுகாப்போம் !!" என்ற தலைப்பில் சமூக ஆர்வலர் திருச்சி தோழர். S.ஸ்ரீதர் அவர்கள் கருத்துரையாற்றினார்.
இரண்டாவது அமர்வை மாநில அமைப்பு செயலாளர் தோழர். M. குருசாமி அவர்கள் தலைமையேற்று நடத்தினார். "ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதிய திருத்த சட்டம்" பற்றி அகில இந்திய உதவி தலைவர் தோழர். S.மோகன் தாஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட தலைவர் தோழர் K.சின்னையன், மதுரை மாவட்ட செயலாளர் தோழர். C.செல்வின் சத்யராஜ், தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர். K.பிச்சை கண்ணு, காரைக்குடி மாவட்ட செயலாளர். தோழர். A. A.ராமன், கும்பகோணம் மாவட்ட செயலாளர் தோழர். மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய தலைவர்களுக்கு துண்டு அணிவித்து, நினைவு பரிசாக புத்தகங்களை வழங்கினார்கள்.
5-மாவட்ட சங்கங்களில் இருந்து 120க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாநில பொருளாளர் தோழர். A. இளங்கோவன் அவர்கள் நன்றி கூறி கருத்தரங்கை முடித்து வைத்தார்.
தோழமையுடன் S.அஸ்லம் பாஷா மாவட்ட செயலாளர் திருச்சி






0 Comments