Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற AIBDPA சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம்

சிறப்பாக நடைபெற்ற AIBDPA சேலம் மாவட்ட செயற்குழு 








            7.11.2025 நவம்பர் புரட்சி தினத்தில் AIBDPA சேலம் மாவட்ட செயற்குழு தோழர். B. சுதாகரன் DVP தலைமையில் BSNLEU அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தோழர் சந்தோஷ்குமார் கேரளா அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தியபின் தோழர் K.M. செல்வராஜு ADT வரவேற்புரை ஆற்றினார்.

                தோழர் E. கோபால் ACS அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். தோழர்கள் K.R. கணேசன் DS FCPA, S.ஹரிஹரன் DS BSNLEU, M.செல்வம் DS TNTCWU, மூத்த தோழர் P.ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். AIC நிதி, மண்டல கருத்தரங்கம் சேலத்தில் நடத்துவது, ஓய்வூதியர் பிரச்சினைகள் ஆகியன பற்றி விவாதம் நடைபெற்று, கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

1) அகில இந்திய மாநாட்டு நிதியினை கிளைகள் முடிப்பது.

2) பொதுச் செயலாளர் பங்கேற்கும் சேலம் மண்டல கருத்தரங்கினை 21.11.2025ல் சிறப்பாக நடத்திக் கொடுப்பது. பங்கேற்கும் மாவட்ட சங்கங்களிடம் உதவி கோருவது.

3) சேலம் மாவட்ட CoC கூட்டத்தினை நடத்தி, குழுக்கள் அமைத்து கருத்தரங்க பணிகள் மேற்கொள்வது.

4) AIBDPA சேலம் 250, மற்ற மாவட்டங்களில் இருந்து 50 என தோழர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்வது.

          இறுதியாக, தோழர் S.அழகிரிசாமி CoS அவர்கள் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் தோழர் P. தங்கராஜு அவர்கள் நன்றி கூறி செயற்குழுவை நிறைவு செய்தார்.

தோழர்களே,

           செயற்குழுவில் எடுக்கப்பட்ட மேற்கண்ட முடிவுகளை சிறப்பான முறையில் அமுலாக்கிட தோழர்கள் ஒத்துழைக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்
S. தமிழ்மணி 
மாவட்ட செயலாளர்
AIBDPA சேலம்

Post a Comment

0 Comments