உற்சாகமாக நடைபெற்ற தஞ்சை மாவட்ட செயற்குழு கூட்டம்
தோழர்களுக்கு வணக்கம்!
இன்று 04.10.2025 சனிக்கிழமை AIBDPA- தஞ்சை மாவட்ட செயற்குழு மன்னார்குடியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த செயற்குழுவிற்கு மாவட்டத் தலைவர் தோழர். P. பக்கிரிசாமி அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். தோழியர். K. கல்பனா அவர்கள் சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத் துணைத் தலைவர் தோழர். K. R. பாஸ்கரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணைத் தலைவர் தோழர். P. கோபிநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் தோழர். K.பிச்சை கண்ணு இடைக்கால செயல்பாடு அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து AIBDPA-மாநில அமைப்புச் செயலாளர் தோழர். M.குருசாமி, மருந்தாளுனர் சங்க முன்னாள் மாநில தலைவர் தோழர். V. கோவிந்தராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் தோழர். K. அகோரம், AIBDPA மாநில பொருளாளர் தோழர். A. இளங்கோவன் ஆகியோர் கருத்துரை வழங்கியதோடு, மாவட்ட செயற்குழுவை வாழ்த்தி பேசினார்கள்.
கூட்டத்தில் ஓய்வுதியர் முழக்கம் சந்தா தோழர். V. பன்னீர்செல்வம் ரூபாய் 500- வழங்கினார். அகில இந்திய மாநாட்டிற்கு நன்கொடையாக மாவட்ட சங்கத்தின் சார்பாக ரூபாய்.5000/- முதல் தவணையாக வழங்கப்பட்டது. இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர். C. சேகர் அவர்கள் நன்றி கூறி செயற்குழுவை முடித்து வைத்தார்.
M.பிச்சைக்கண்ணு
மாவட்ட செயலாளர் AIBDPA
தஞ்சாவூர்.
0 Comments