Latest

10/recent/ticker-posts

AIBDPA நெல்லை & பாளை கிளைகளின் இணைந்த கிளைக் கூட்டம்

 AIBDPA நெல்லை & பாளை கிளைகளின் இணைந்த கிளைக் கூட்டம்





வணக்கம் தோழர்களே...!!

                       திருநெல்வேலி & பாளையங்கோட்டை கிளைகளின் இணைந்த கிளைக் கூட்டம் 03-10-2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கட்டிடம் (CITU) தியாகராஜநகர், பாளயங்கோட்டையில் வைத்து நடைபெற்றது.

                 பாளையங்கோட்டை கிளைத் தலைவர் தோழர்  D.சந்திரபோஸ் தலமை தாங்கினார்.தோழர் S.சங்ரநாராயணன் அஞ்சலி உரையாற்றினார். பாளையங்கோட்டை கிளைச் செயலர் தோழர்.P. சூசை வரவேற்புரையாற்றினார். தோழர் S.முத்துசாமி, மாவட்ட செயலாளர் துவக்க உரையாற்றினார்.

           தோழர் V. சீதாலட்சுமி, அகில இந்திய உதவி பொருளாளர், AIBDPA. மற்றும் தோழர் S.நடராஜா, மாநில உதவி தலைவர், AIBDPA, மாவட்டச் செயலாளர் NCCPA மற்றும் FCPA கமிட்டி உறுப்பினர் சிறப்புரையாற்றினர். தோழர் M.கனகமணி, மாவட்டத் தலைவர், AIBDPA. தோழர் S.சங்கரநாராயணன், மாவட்ட பொருளாளர். AIBDPAதோழர் P.ராஜகோபால், மாவட்ட செயலாளர் TNTCWU வாழ்த்துரை வழங்கினர்.

          சில தோழர்கள் அமைப்பு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர். தோழர்களின் கேள்விகளுக்கு மாவட்ட செயலாளர் விளக்கமளித்தார். 2025 டிசம்பர் 17 & 18 தேதிகளில் கோயமுத்தூரில் நடக்கவிருக்கும் நமது அகில இந்திய மாநாட்டிற்கு நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடப்பட்டது.

        பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி கிளைத் தோழர்கள்மொத்தம் நன்கொடை ரூபாய் 37,000/=(ரூபாய் முப்பத்தி ஏழு ஆயிரம்)  வழங்கினர். நிறைவாக தோழர்.S.செல்லத்துரை, கிளைச் செயலர், திருநெல்வேலி நன்றி உரையாற்றினார்.

தோழமையுடன்,
தோழர்.P. சூசை, 
கிளைச் செயலர்
பாளையங்கோட்டை.

தோழர் S.செல்லத்துரை,
கிளைச் செயலர்,
திருநெல்வேலி

Post a Comment

0 Comments