Latest

10/recent/ticker-posts

CGHS பயனாளிகள், ABHA ( Ayushman Bharat Health Account) திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமா ?

  AIBDPA TN* 

 CGHS பயனாளிகள், ABHA ( Ayushman Bharat Health Account)  திட்டத்தில் தங்களை  இணைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமா ?




தோழர்களே,

ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சருக்கு NCCPA சார்பில் 18.9.25 அன்று எழுதப்பட்ட கடிதம்.

            CGHS அமைப்பானது,  தனது பயனாளிகளை தன்னிச்சையாக, அவர்களின் உடன்பாடின்றி, ABHA திட்டத்தில் இணைக்கும் பணியினை பல்வேறு CGHS நல மையங்களில் செய்து வருவதாகத் தெரிய வருகின்றது. ஏற்கனவே ஒன்றிய அரசின் இத்தகைய அமைச்சகக் குறிப்புக்கு எதிராக பல்வேறு ஓய்வூதியர் அமைப்புகளுடன் சேர்ந்து, NCCPA அமைப்பு எதிர்ப்புக் கடிதம் எழுதியது. அதன் காரணமாக கடந்த 25.6.25 அன்று ஒன்றிய அரசு கட்டாயமாக இணைக்க வேண்டும் என்ற குறிப்பாணை நிறுத்தி வைக்கப்படுவதாகவும், விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்ற திருத்தத்தையும் வெளியிட்டது. 

               ஆனால், தற்போது CGHS அமைப்பில் உள்ள பயனாளிகளை  ABHA வில் இணைத்துக் கொள்ளுமாறு அந்த அமைப்பே கட்டாயப் படுத்துவதாகத் தெரிய வருகின்றது. அப்படி தங்களை இணைத்துக் கொள்பவர்களுக்கு ABHAவின் பயன்கள் மட்டும் தான் கிடைக்கக்கூடும் என்ற ஐயப்பாடும் எழுகிறது. அல்லது CGHSன் தற்போதைய பயன்கள் அனைத்தும் ABHA திட்ட பயன்களுக்குள் நிறுத்தப்பட்டு விடுமா? என்ற ஐயமும் ஏற்படுகிறது.

ஒன்றிய அரசு இந்த ஐயப்பாடுகளை நீக்கி தெளிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று NCCPA அமைப்பு கேட்டுக்கொள்கிறது.

            இத்தருணத்தில் CGHS திட்ட பயனாளிகள் ABHA உடன் எங்களை இணைத்துக் கொள்வது அவர்களின் விருப்பத்தை பொறுத்ததே என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். மேலும் CGHS  பயனாளிகளுக்கு அங்கீகப்பட்ட மருத்துவமனைகளில்,  கிடைக்கும் உள் நோயாளி சிகிச்சைக்கான செலவுத் தொகை என்பது, ABHA வில் உள்ளதைப் போல் ரூபாய் 5 லட்சம் என்ற உச்சவரம்பு கட்டுப்பாட்டுக்குள் அடைக்கப்பட்டு விடக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறோம்.  

இத்தகைய ஐயங்களை தெளிவுபடுத்தும் விதமாக விரிவான அறிக்கையை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று தோழர். K. ராகவேந்திரன் 

பொதுச் செயலாளர்,

NCCPA அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை நாம் பரவலாக ஓய்வூதியர்களிடம் கொண்டு சொல்லுவோம்.

தோழமையுள்ள
R.ராஜசேகர்,
மாநில செயலர்
AIBDPA TN
19.9.25

Post a Comment

0 Comments