Latest

10/recent/ticker-posts

AIBDPA TN மாநில மைய கூட்டம் 22-09-2025

 AIBDPA TN  மாநில மைய கூட்டம் 22-09-2025


தோழர்களே, 

                 மாநிலச் சங்கத்தின் மையக் கூட்டம் 22-09-2025 அன்று ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் மோகன் தாஸ், மாநில தலைவர் தோழர் C.ஞான சேகரன், மாநிலச் செயலாளர் தோழர் R.ராஜசேகர், மாநில துணைச் செயலாளர் தோழியர் பெர்லின் கனகராஜ், மாநில பொருளாளர் தோழர் A. இளங்கோவன்,  மாநில அமைப்புச் செயலாளர் A.ஆரோக்கிய நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

 விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் :- 

1) 15 வது அகில இந்திய மாநாடு டிசம்பர் 17, 18 2025 இல் நடக்க இருப்பது குறித்து நடைபெற்று வரும் பணிகள் பரிசீலிக்கப்பட்டன. மாநாட்டு மண்டபம் மற்றும் உறுப்பினர்கள் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  நன்கொடை ரசீதுகள் நோட்டீஸ்கள், மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.  அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு வங்கி கணக்கு திருச்சி இந்தியன் வங்கியில் மாநாட்டு செலவினங்களுக்கான தனியாக துவங்கப்பட்டு கணக்கு எண் கொடுக்கப்பட்டுள்ளது.  

மாவட்டங்கள் செயற்குழு கூட்டங்கள் நடத்தி வசூல் செய்து வருகிறார்கள்.  இதுவரை ஒன்பது மாவட்டங்களில் செயற்குழு கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. இன்னும் நான்கு மாவட்டங்கள் செயற்குழு நடத்துவதற்கு தேதி கொடுக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள மாவட்டங்களும் உடனடியாக செயற்குழு கூட்டங்களை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 

பல மாவட்டங்களில் கிளை கூட்டங்கள் நடைபெற்று வசூல் ஊக்குவிக்கப்படுகிறது என்பது நல்ல அம்சம். 

விருதுநகர் போன்ற ஒரு சில மாவட்டங்களில் சிறப்பு கருத்தரங்கங்களும் நடைபெற்று வருகிறது. இதுவும் நல்ல ஒரு முன்முயற்சி. மற்ற மாவட்டங்களும் பொதுவான தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்த முயற்சிக்கலாம். 

வரவேற்புக் குழுவின் இலட்சினை லோகோ வெளியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 01.10.2025 அன்று கோவையில் நடைபெறும் மாவட்ட செயற்குழு கூட்டம், மற்றும் உலக மூத்தோர் தினத்தை ஒட்டி கோவையில் லோகோவை வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது

 2. .10.10.2025 டெல்லி பேரணி

                     சிவில் ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 10.10.25 அன்று நடைபெறும் டெல்லி பேரணிக்கு  நமது மாநிலத்தில் இருந்து 30 தோழர்கள் கலந்து கொள்கிறார்கள். நாம் கடந்த காலங்களில் கொடுத்ததை போல இம்முறையும் பேரணிக்கு டில்லி செல்லும் தோழர்களுக்கு மாநிலச் சங்கத்தின் சார்பாக செலவுக்காக ரூபாய் 500/- கொடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

ஒருநாள் தங்குமிடம் மத்திய சங்கம் ஏற்பாடு செய்யும்.  மீதமுள்ளவற்றை மாவட்ட சங்கங்களும் அந்த தோழர்களும் செய்து கொள்ள வேண்டும்.  

 3)  மாநில செயற்குழுக் கூட்டம்.

நடைபெற்றுவரும் அகில இந்திய மாநாட்டு வேலைகளை பரிசீலனை செய்வதற்காக மாநில செயற்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. கூட்டம் ஆன்லைனில் நடைபெறும். தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

 4) சங்க அமைப்பு விதிகள் திருத்தம்

அகில இந்திய மாநாட்டில் நமது சங்க அமைப்பு விதிகளில் திருத்தம் செய்ய ஒரு கமிட்டி போடப்பட்டுள்ளது.  நமது மாநிலத்தில் இருந்து  தோழர் S.மோகன்தாஸ் அந்த கமிட்டி உறுப்பினராக உள்ளார். 15.10.2025 க்குள் அதற்கான திருத்தங்கள் தரப்பட வேண்டும் என்று மத்திய சங்கம் அறிவித்து உள்ளது. 

அந்த அடிப்படையில் நாம் 16.06.2025 அன்று சென்னையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் சங்க அமைப்பு விதிகள் திருத்தங்களை ஆராய கமிட்டி ஒன்றை முன்மொழிந்து இருந்தோம். அதன்படி தோழர் டி கே பிரசன்னன், தோழர் செல்வின் சத்யராஜ், தோழர் மாணிக்க மூர்த்தி ஆகியார் அந்த கமிட்டியில் இருந்து செயல்படுவார்கள்.  அவர்களுக்கு மாவட்டங்களில் இருந்து தோழர்கள் தங்களுடைய ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும். இந்த கமிட்டியும் தன்னுடைய முன்மொழிவுகளை மாநில சங்கத்திற்கு தெரிவித்தால், மத்திய சங்கம் தீர்மானித்துள்ள கமிட்டிக்கு, மாநில சங்கம்  திருத்தங்களை அனுப்பும்.

தோழமை வாழ்த்துக்களுடன்...
R. ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
AIBDPA TN.
23.9.25

Post a Comment

0 Comments