சேலம் மாவட்டத்தில் சாதனை படைத்த சேலம் நகர கிளைகளின் இணைந்த பொதுக் குழு கூட்டம்
AIBDPA சேலம் நகர கிளைகள் மெயின், மெய்யனூர் இணைந்து பொதுக் குழு கூட்டத்தினை இன்று காலை சேலம் BSNLEU அலுவலகத்தில் நடத்தினர். கிளைத் தலைவர்கள் தோழர்கள் R.இளங்கோவன், மணி இருவரும் கூட்டுத்தலைமை ஏற்றனர். மெய்யனூர் கிளைச் செயலர் தோழர் P.சம்பத் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் தோழர் P. தங்கராஜு துவக்க உரை ஆற்ற, DVP தோழர் B. சுதாகரன், ACS தோழர் E. கோபால், DP தோழர் M. மதியழகன், DS S. தமிழ்மணி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கோவையில் டிசம்பர் 17, 18 தேதிகளில் நடைபெற உள்ள AIBDPA வின் ஐந்தாவது அகில இந்திய மாநாட்டு நிதியினை மாநில, மாவட்ட செயற்குழுக்களின் முடிவுப்படி வழங்குவது பற்றி விரிவாக பேசப்பட்டு, தோழர்களிடம் நன்கொடை கோரப்பட்டது. அதன் அடிப்படையில் தோழர்கள், இதுவரை எந்தக் கிளையும் செய்யாத அளவிற்கு நிதி அளித்தனர்
E. கோபால் ACS ₹5000
R.இளங்கோவன் DOS ₹5000
P. சம்பத் BS ₹4000
P. செல்வராஜு ₹4000
K. தமிழரசன் ₹2500
M. மதியழகன் DP ₹2500
அசோகன் ₹2500
குழந்தைவேலு AO ₹2000
D. சுப்பிரமணி BS ₹2000
மகேந்திரன் DOS ₹2000
B. சுதாகரன் DVP ₹2000
லட்சுமி மாரியப்பன் ₹2000
மணி BP ₹2000
பத்மநாபன் ₹1000
S. தமிழரசன் ₹1000
இளங்கோ SVT ₹1000
அருள்மொழி ₹1000
ராமலிங்கம் ₹1000
சித்ரசேனன் ₹1000
M. பழனிசாமி ₹1000
பாத்திமா பீபி ₹1000
பங்கஜம்நாச்சியபன் ₹1000
என மொத்தமாக ₹46500/- கூட்டத்தில் தோழர்கள் வழங்கினர். முன் மாதிரியாக நிதி வழங்கியுள்ள சேலம் நகரக் கிளைகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதியாக, மெயின் கிளைச் செயலாளர் தோழர் D. சுப்பிரமணி அவர்கள் நகரக் கிளைகளின் நிதி கோட்டாவான ₹30000 + ₹30000 (60000) ஐ முடித்துக் கொடுப்போம் என உறுதியளித்து, நன்றி கூற இணைந்த பொதுக் குழு கூட்டம் நிறைவுற்றது.
0 Comments