Latest

10/recent/ticker-posts

பாராட்டப்பட வேண்டிய சேலம் மாவட்ட ராசிபுரம் கிளைக்கூட்டம்

பாராட்டப்பட வேண்டிய சேலம் மாவட்ட ராசிபுரம் கிளைக்கூட்டம் 





25.9.25 அன்று CoC சார்பில் ராசிபுரத்தில் நடைபெற்ற கிளை கூட்டத்திற்கு தோழர் P.மாரிமுத்து AIBDPA அவர்கள் தலைமை ஏற்றார். திரளான தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ADS தோழர் P.A.ஆறுமுகம் அவர்களின் அஞ்சலி உரைக்குப் பின் RSP கிளைச் செயலாளர் தோழர் P.M. ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.

               மாநில அமைப்புச் செயலர் தோழர் S. அழகிரிசாமி அவர்கள் துவக்க உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் தோழர் P.தங்கராஜு அவர்களும், TNTCWU மாவட்ட பொருளர் தோழர் V. குமார் அவர்களும் கருத்துரை வழங்கினர். மாவட்ட செயலாளர் S.தமிழ்மணி சிறப்புரை ஆற்றினார். தலைவர்கள் சர்வதேசிய, தேசிய நிலைமைகள், சம்பள மாற்றம், பென்சன் மாற்றம், ஒப்பந்த தொழிலாளர் பிரச்சினைகள், AIBDPA ஐந்தாவது அகில இந்திய மாநாடு ஆகியன பற்றி விளக்கிப் பேசினர்.

               லமாநில, மாவட்ட செயற்குழுக்களின் முடிவுப்படி AIBDPA மாநாட்டிற்கான நிதியினை தாராளமாக வழங்க வேண்டுகோள் விடப்பட்டது. அதன்படி கீழ்கண்ட தோழர்கள் நன்கொடை அளித்தனர் 

P. M. ராஜேந்திரன்         ₹5000

P. A. ஆறுமுகம்                ₹5000

M. பெரியசாமி                ₹5000

R. N. பெரியசாமி SDE   ₹3000

S. கணேசன்                     ₹2000

V. K. ராஜு                          ₹2000

R. கோவிந்தராஜு        ₹2000

P. ரங்கசாமி                     ₹2000

P. மாரிமுத்து                   ₹2000

M. குணசேகரன்           ₹2000

T. கருப்பண்ணன்        ₹2000

P. முத்துசாமி                  ₹1500

Tmt ராஜலக்ஷ்மி          ₹1000

என ₹34500 வழங்கியுள்ளனர். மேலும் கிளையின் கோட்டாவினை முடித்து தருவோம் எனவும் தோழர்கள் உறுதி அளித்தனர்.

இறுதியாக தோழர் விஜயகுமார் TNTCWU அவர்கள் நன்றி கூற கூட்டம் முடிவடைந்தது

Post a Comment

0 Comments