வேலூர் மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம் மற்றும் சிறப்பு கருத்தரங்கம்
வேலூர் மாவட்ட விரிவடைந்த செயற்குழுவும், அகில இந்திய மாநாட்டை ஒட்டிய சிறப்பு கருத்தரங்கமும் இன்று 24.09.2025ல் வேலூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர். தங்கவேலு தலைமை வகித்தார். மாநில தலைவர் தோழர். ஞானசேகரன் துவக்க உரையாற்றினார். மாநிலச் செயலர் தோழர். ராஜசேகர் அகில இந்திய மாநாட்டுக்கான திட்டமிடல் குறித்து விளக்க உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் AIIEA அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தோழர். ராமன் மதச்சார்பின்மை மற்றும் அரசியல் சாசனம் சந்திக்கும் இன்றைய சவால்களைப் பற்றி கருத்துரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதிய விதிகளுக்கு எதிரான மறு சீராய்வு என்பதை பற்றி மாநில செயலர் தோழர் ராஜசேகர் கருத்துரையாற்றினார்.
.. பின்னர் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் தோழர் மாரிமுத்து, AIBDPA மாநில உதவிப்பொருளர் தோழர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயலர் தோழர் முருகன் செயல்பாட்டு அறிக்கையினையும், மாவட்ட பொருளாளர் தோழர் லோகநாதன் நிதிநிலை அறிக்கையினையும் சமர்ப்பித்தனர்.
. அகில இந்திய மாநாட்டுக்கான நன்கொடையாக கிளைச் சங்கங்கள் மூலமாக வசூல் செய்யப்பட்ட ரூபாய் ஒரு இலட்சம் நிதியை மாநிலச் செயலர் முன்னிலையில் மாநில உதவிப் பொருளாளர் வசம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 100 தோழர்கள் பங்கேற்றனர்.
0 Comments