27.9.2025ல் எழுச்சியாக நடைபெற்ற மதுரை AIBDPA விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்
அருமை தோழர்களே,
வணக்கம்...
மதுரை மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம் தோழர். M.சௌந்தர் மாவட்ட தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் தோழர் K. விஜயகுமார் ADS அஞ்சலி உரை நிகழ்த்தினார். தோழர். செல்வின் சத்யராஜ் மாவட்ட செயலாளர் வரவேற்புரையும், அறிக்கையிலுள்ள அஜந்தா அறிமுக உரையும் நிகழ்த்தினார்.
அதன் பின் தோழர். R. ராஜசேகர், மாநில செயலாளர் சிறப்புரை நிகழ்த்தினார். ஐந்தாவது அகில இந்திய மாநாட்டின் தயாரிப்புகளும் நாம் செய்ய இருக்கின்ற பணிகள் பற்றி விரிவாக எடுத்து கூறி பின்பு பென்ஷன் மாற்றம் சம்பந்தமாகவும், பென்சன் வேலிடேசன் பில் சம்பந்தமாகவும் விரிவாக உரையாற்றினார்.
. அதன் பின் அகில இந்திய மாநாட்டிற்கான வசூல் நடைபெற்றது. தோழர்கள் மனமுவந்து அந்தக் கூட்டத்தில் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கி இருக்கிறார்கள். நிதி வழங்கிய அத்தனை தோழர்களுக்கும் நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அருமை தோழர். P. ரிச்சார் அவர்கள் ரூபாய் 5000 நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கும் நாம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம். அதன் பின் தோழர் S. ஜான்போர்ஜியா மாநில உதவி செயலாளர் வாழ்த்துரை வழங்கினார்..தோழர் ரிச்சர்ட் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வாழ்துரை வழங்கினார்.
அதன் பின் தோழர் R.சண்முகவேல் மாவட்ட பொருளாளர் நன்றியுரை நிகழ்த்த செயற்குழு இனிதே நிறைவு பெற்றது,
C. Selwyn Sathiaraj DS AIBDPA MA
0 Comments