சிகரம் தொட்ட சேலம் மாவட்ட சேந்தமங்கலம் கிளை..
மாநாட்டு நிதி கோட்டா இலக்கையும் தொட்டு.....! நிறைவும் செய்தது......!!
தோழர்களே,
மாதம் தவறாமல் கூடும் AIBDPA சேந்தை கிளையின் கூட்டம் இன்று (28.9.2025) நடைபெற்றது. 7பெண் தோழர்கள் உட்பட 25க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றது சிறப்பம்சம் ஆகும். கூட்டத்திற்கு BP தோழர். முத்து தலைமையேற்க, BT தோழர். செல்வராஜு அஞ்சலி உரை நிகழ்த்த, BS தோழர். அங்குராஜு வரவேற்புரை ஆற்றினார்.
மாநில அமைப்புச் செயலாளர் தோழர் S.அழகிரிசாமி, ADS தோழர் V. கோபால், DT தோழர். P.தங்கராஜு, ADT தோழர் K.M.செல்வராஜு, DS தோழர் S.தமிழ்மணி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கோவை AIBDPA ஐந்தாவது அகில இந்திய மாநாட்டின் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் 2000,1500,1000 என வாரி வழங்கி, AIBDPA அமைப்பின் மீதான பற்றினை வெளிப்படுத்தினர். பத்தே நிமிடங்களில் கிளையின் கோட்டாவான ₹25000/- ஐ வசூலித்து மாவட்ட சங்கத்திடம் வழங்கிவிட்டனர். உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதியாக தோழர் சந்திரமோகன் நன்றி கூற கிளை கூட்டம் நிறைவுற்றது
S. தமிழ்மணி
மாவட்ட செயலாளர்
சேலம்
0 Comments