Latest

10/recent/ticker-posts

Forum of Civil Pensioners Associations, தமிழ்நாடு - 4.8.25 -ஆலோசனைக் கூட்ட முடிவுகள் !!

  AIBDPA TN

Forum of Civil Pensioners Associations, தமிழ்நாடு ஆலோசனைக் கூட்ட முடிவுகள் 4.8.25

           Forum of Civil Pensioners Associations, (FCPA) தமிழ்நாடு மாநில அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று (4.8.2025) காலை பூக்கடை BSNL ஊழியர் சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. உறுப்பு சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

               Validation of CCS Pension Rules என்ற சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  25.7.2025 அன்று நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டம் குறித்து பரிசீலனை செய்யப்பட்டது. எதிர்பார்த்தைவிட,  மனிதச்சங்கிலி இயக்கத்தில்  ஓய்வூதியர்கள் சென்னை உட்பட தமிழ்நாடு முழுதும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றதை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சங்க தலைவர்களும் மகிழ்ச்சியுடன் எடுத்துரைத்தனர். ஓய்வூதியர்களை பெருமளவில் திரட்டிய அனைத்து சங்க தலைமைகளுக்கும், பங்கேற்ற ஓய்வூதியர்களுக்கும் கூட்டத்தில் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

       Validation சட்டப்பிரிவுக்கு எதிராக அடுத்த கட்ட இயக்கமாக சென்னையில் நடைபெறவுள்ள சிறப்பு மாநாட்டை (Convention) மிக சிறப்பாக நடத்துவது என ஆலோசனைக் கூட்டத்தில்  ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது

         26.8.2025 பிற்பகலில் ( நேரம் பின்னர் அறிவிக்கப்படும்) பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றத்தில் Convention நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கன்வென்ஷனுக்கான உத்தேச செலவுகள் மதிப்பிடப்பட்டு, உறுப்பு சங்கங்களுக்கான Quota அனைவரின் ஒப்புதலுடன் இறுதிப்படுத்தப்பட்டது. சங்கங்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட Quotaவை விரைந்து நிதி பொறுப்பாளர் தோழர் பஞ்சாட்சரம் (AIBDPA) அவர்களிடம் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  760 இருக்கைகள் கொண்ட ராஜா அண்ணாமலை மன்ற கன்வென்ஷனுக்கு ஓய்வூதியர்களை முழுமையாக திரட்ட அனைத்து சங்கங்களும் உறுதியளித்தன.

கன்வென்ஷன் உட்பட எதிர்வரும் இயக்கங்களை செம்மையாக நடத்திட  ஒரு Core Group உருவாக்கிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இதனை இறுதிப்படுத்துவதற்காக, அனைத்து சங்க மாநிலச் செயலர்கள் / பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டம் 14.8.2025 காலை 10 மணியளவில் பூக்கடை BSNL ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெறும்.

            கன்வென்ஷனில் நிறைவேற்றப்படும் தீர்மானமும், மாண்புமிகு பிரதமருக்கு ஆளுநர் மூலமாக அனுப்படவுள்ள மெமோரேண்டமும் 28.8.2025 அன்று ஆளுநரிடம் அளித்திட Forum தமிழ்நாடு கிளை சார்பாக  நடவடிக்கை எடுக்கப்படும். தீர்மானத்தின் நகல் அனைத்து ஊடகங்களுக்கும் அளிக்கப்படும்.

             மாநில அளவிலான சென்னை கன்வென்ஷன் பிரம்மாண்ட வெற்றி பெற FCPA அனைத்து மாவட்ட உறுப்பு சங்கங்களும் ஓய்வூதியர்களை கன்வென்ஷனுக்கு பெரும் எண்ணிக்கையில் திரட்டி மற்றுமொரு வரலாறு படைக்குமாறு FCPA தமிழ்நாடு கிளை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்
 C.K. நரசிம்மன்
கன்வீனர்

Post a Comment

0 Comments