புதுச்சேரி மாவட்ட இணைந்த பொதுக்குழு கூட்டம் !!
சுற்றறிக்கை 29/25 dt..21.08.25
அனைவருக்கும் வணக்கம்
இன்று 21.08.25 நமது AIBDPAவின் மாவட்ட இணைந்த பொதுக்குழு கூட்டம் புதுவை பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அலுவலகத்தில் வில்லியனூர் கிளை தலைவர் தோழர். A. நாராயணசாமி மற்றும் மாவட்டத் தலைவர் தோழர் V. ராமகிருஷ்ணன் ஆகியோரின் இணைந்த தலைமையுடன் நடைபெற்றது.
முதலாவதாக மாவட்ட செயலர் 16.08.25 இல் கோவையில் நடைபெற்ற AIBDPA மாநில செயற்குழுவின் முடிவுகள் பற்றி எடுத்துரைத்தார்.
அதன் அடிப்படையில் நமது AIBDPA சங்கத்தின் ஐந்தாவது அகில இந்திய மாநாடு கோவை மாநகரில் வருகின்ற டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெறும் எனவும் அகில இந்திய மாநாட்டின் கௌரவ தலைவராக சிஐடியு சங்கத்தின் மூத்த தோழரும் முன்னாள் பாராளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினருமான தோழர் T. k. ரங்கராஜன் அவர்கள் பொறுப்பேற்க உள்ளார் எனவும் அகில இந்திய மாநாட்டின் தலைவர் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர் அதில் அனைத்து AIBDPA மாவட்ட செயலர்களும் மாநில செயற்குழு உறுப்பினர்களும் அகிலஇந்த மாநாட்டின் வரவேற்பு குழுவில் வரவேற்பு குழுவில் இடம்பெறுவார்கள் எனவும் தீர்மானிக்கப்பட்டது
அகில இந்திய மாநாட்டிற்கான நிதி பற்றி ஆலோசனையில் அந்தந்த மாவட்டங்களின் உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில் இலக்கு முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் புதுவை மாவட்ட சங்கத்திற்கு ரூபாய் 1,000,00/- என்பது இலக்காக நியமிக்கப்பட்டுள்ளது.
பென்ஷன் வேலிடேசன் சம்பந்தமாக 26.08.25 மாலை இரண்டு மணி முதல் சென்னை ராஜா அண்ணாமலை அரங்கத்தில் நடைபெறும் சிறப்பு கருத்து அரங்கத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் இருந்து தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மேற்கூறிய அதே பென்ஷன் வேலிடேசன் சம்பந்தமாக ஃபோரம் ஆஃப் சிவில் பென்சனர் அசோசியேசன் சார்பாக அக்டோபர் 10ஆம் தேதி புதுடெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் பேரணிக்கும் தமிழகத்தில் இருந்து தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மாநில செயற்குழுவில் எடுத்துரைக்கப்பட்டது.
நமதுAIBDPA ஐந்தாவது அகில இந்திய மாநாட்டின் நிதி சம்பந்தமாக நமது மாவட்ட பொது குழுவில் தோழர் மற்றும் தோழியர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் *ரூபாய்1000* எனவும் இந்தத் தொகையை வரும் ஆகஸ்ட் 2025 மற்றும் செப்டம்பர் 2025-ல் கிடைக்க பெறும் பென்ஷன் பட்டுவாடாவில் செலுத்திட வேண்டும் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது
மேற்கூறிய 26.8.25 மற்றும் 10.10.2025 டெல்லி பேரணியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தோழர்கள் வரும் ஞாயிறு 24.08.25க்குள் தங்களின் பெயர்களை முறையே தலைவர் செயலர் மற்றும் பொருளாளரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நிதி சம்பந்தமான விவாதத்தின் போது நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் நமது மாவட்டத்தின் மூத்த தோழருமான தோழர். P. சக்திவேல் அவர்கள் தனது பங்காக ரூபாய் ஐந்தாயிரம் வழங்கினார். மேலும் சில தோழர்களும் தங்களது பங்கை செலுத்தினர்.
பென்ஷன் வேலிடேஷனுக்காக கூட்டுப் போராட்டங்களில் ஒரு பகுதியாக வரும் 25.08.25-ல் புதுச்சேரி ராஜா திரையரங்கம் அருகில் உள்ள காமராஜர் சிலையிலிருந்து மாலை 5 மணி அளவில் புதுச்சேரியில் பேரணியும் அதைத்தொடர்ந்து புதுச்சேரி துணை நிலைய ஆளுநரிடம் மனு அளிக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளதால் அனைத்து தோழர்களும் அதாவது நடந்து முடிந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டது போல் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அதைவிட கூடுதலாக நமது AIBDPA தோழர் தோழியர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நடந்து முடிந்த நமது இணைந்த மாவட்ட பொதுக்குழுவில் முன்னதாக நம்மிடம் பணியாற்றி ஓய்வு பெற்ற தோழர். S. பாலகிருஷ்ணன் R M ஆட்சிக்காடு அவர்கள் கடந்த ஆகஸ்ட் 2024 இயற்கை எய்தினார் அதை தொடர்ந்து அவரது குடும்ப ஓய்வூதியத்திற்காக 2025 பிப்ரவரியில் விண்ணப்பிக்கப்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களினால் தாமதம் ஏற்பட்டு இம்மாதம் அதாவது ஆகஸ்ட் 4ஆம் தேதி திருமதி S. மேகலா அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறப்பட்டது அதைத் தொடர்ந்து தாமதிக்கப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகையும் 07.08.25ல் கிடைக்கப்பெற்றது.
அதன் பின்னர் மாவட்ட செயலர் தலைவர் பொருளாளர் நேரில் சென்று அவர்களை நமது AIBDPA சங்கத்தில் உறுப்பினராக இணைக்கப்பட்டார். அவ்வமையம் அவர்களுடைய சார்பாக மாவட்ட சங்கத்திற்கு ரூபாய் *ஐந்தாயிரம்* நன்கொடையாகவும் வழங்கியதோடு நடைபெற்ற கூட்டத்திலும் வந்து கலந்து கொண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
முக்கிய குறிப்பு
டெல்லி போராட்டத்திற்கு கலந்து கொள்ளும் தோழர்கள் டிக்கெட் முன்பதிவிற்காக உடனடியாக மாவட்ட தலைவரை அணுக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தோழமையுடன்
V. ராமகிருஷ்ணன்
மாவட்ட செயலர்
புதுச்சேரி மாவட்டம்.
0 Comments