AIBDPA TN - Jt.CCA திருமதி கே கௌதமி பாலாஸ்ரீ அவர்களுடன் சந்திப்பு - 20.8.25
தோழர்களே,
நாம் 14.8.25 அன்று செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருந்தது போல Jt.CCA அவர்களுடன் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை 20.8.25 அன்று நடைபெற்றது.
1) மாநிலச் செயலர் தோழர் R.ராஜசேகர்,
2) மாநில ஆலோசகர் தோழர்.C.K. நரசிம்மன் ,
3) மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.
A.ஆரோக்கியநாதன்
4) தோழர் R. சீனிவாச ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
1) Jt.CCA வுடன்
2) திருமதி லட்சுமி AO Pension
3) திருமதி மீனாட்சி AAO Pension
4) திருமதி லோகேஸ்வரி AAO PDA
5) திரு செல்லத்துரை AAO ஆகிய கணக்கு அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
1) நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கக்கூடிய HELP DESK, Freeze மற்றும் Long Pending குடும்ப ஓய்வூதியம் பிரச்சனைகளைகள் ஒவ்வொரு பிரச்சனையாக விவாதிக்கப்பட்டு உள்ளது.
2) மொத்தம் 73 PPO க்கள் DOT இடம் HELP DESK தீர்வுக்காக அனுப்பப்பட்டு இருப்பதாகவும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் சிரமம் இருப்பதாக சுட்டிக்காட்டினார்கள்.
சங்கங்களும் DOT மட்டத்தில் இந்த பிரச்சனையை எடுத்தால் உதவியாக இருக்கும் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார்கள்.
நாமும் இந்த பிரச்சனையை நம்முடைய மத்திய சங்கத்தோடு ஆலோசிப்போம்.
3) குடும்ப ஓய்வூதியம் மாற்றம் (Authorisation) காலதாமதம் ஆவதை சுட்டிக்காட்டி, அது PDA பகுதியில் பென்ஷனை பட்டுவாடாவை நிறுத்த வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஆகும் கால தாமதத்தை அவர்களுக்கு உணர்த்தினோம்.
விரைவில் இது சரி செய்யப்படும் என்று உறுதியளித்தனர்.
4) கடந்த ஜுன் மாத அதாலத்தில் கொடுக்கப்பட்ட பிரச்சினைகளை எல்லாம் CCA அலுவலக வெப்சைட்டில் பதிவிட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதிப்படுத்தினர்.
5) நோசனல் இன்கிரிமெண்ட் பிரச்சினையில், நீதிமன்ற தீர்ப்பு பெற்ற 30 பேருக்கு தயாராகி விட்டதாகவும் அவை PDAக்கு விரைவாக அனுப்பப்படும் என்றனர்.
6) NON-PAY Corrections, வங்கிகள் கணக்குகள் மாற்றம் ஆகியன சரி செய்யப்பட்டுள்ளது.
ஒரு மாத காலத்தில் இதற்கான சாதகமான முடிவுகள் தெரிய வரும் என்று உறுதி அளித்தனர்.
7) Dy.CCA பதவி விரைவாக நிரப்பப்படும்.
8) நிலுவைத் தொகை வழங்கப்படும் போது Calculation sheet, sampan 2.0 வரும் பொழுது பிரச்சனை தானாக தீர்க்கப்படும்.
தற்போது கேட்பவர்களுக்கு அது கொடுக்கப்படும் என்றனர்.
9) குடும்ப ஓய்வூதியத் பிரச்சினைகள் குறித்தும் ,HELP-DESK பிரச்சினைகள் குறித்தும் தீவிர கவனம் செலுத்தப்படும்.
10) ஏனைய கொள்கை ரீதியான பிரச்சினைகளை Pr.CCA மட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்து உள்ளார்கள்.
R. ராஜசேகர்
மாநிலச் செயலர்.
22.8.25
0 Comments