Latest

10/recent/ticker-posts

மெடிக்கல் அதாலத் மற்றும் பில் பட்டுவாடா தொடர்பான நமது உடனடி கடமைகளும் !!!

  AIBDPA TN

 மெடிக்கல் அதாலத் மற்றும் பில் பட்டுவாடா தொடர்பான நமது உடனடி கடமைகளும்


தோழர்களே,  

            நீண்ட தொடர் போராட்டத்திற்கு பிறகு 2022ஆம் ஆண்டு முதல் நம்முடைய மெடிக்கல் அலவன்ஸ்களும் மெடிக்கல் பில்களும் 3 மாதத்திற்கு ஒருமுறை முறையாக பெறப்பட்டு வருகின்றது. 

இது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியும் மாநில சங்கத்தின் தலையீடும், வழிகாட்டுதலும்  மாவட்ட சங்கங்களின் ஈடுபாடும் இதற்கு காரணம். 

          2023 & 24 ஆண்டுகளில் தமிழகத்தில் மெடிக்கல் அதாலத் மாநில மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் நடைபெற்றது. பல பிரச்சனைக்கள் தீர்வு காணப்பட்டன. 

         இப்பொழுதும்  Medical Adalat நடைபெற வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் தற்போதைய மாநில நிர்வாகம் மெடிக்கல் அதாலத் நடத்த அகில இந்திய உத்தரவு இல்லை. ஆகவே நடைமுறைப் படுத்துவது சாத்தியம் இல்லை என்கின்ற நிலையில் இருக்க,  நாம் தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்துகின்றோம். 

     அவர்களும் மாவட்டங்களில் மெடிக்கல் பிரச்சனைகள் எல்லாம் சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்ற காரணத்தைக் கூறுகிறார்கள். 


தோழர்களே, 

வரும் செப்டம்பர் மாதம் நம்முடைய மெடிக்கல் பில்களும்  அலவன்ஸ்களும் பட்டுவாடா செய்யப் படவேண்டும். 

ஜூன் மாத பட்டுவாடா மாவட்ட மட்டங்களில் முறையாக நடைபெறவில்லை என்ற குறைபாடு இருக்கிறது. 

.       ஆகவே நம்முடைய தோழர்கள் மாவட்ட மட்டங்களில் மெடிக்கல் அலவன்ஸ் பட்டுவாடா செய்வது, மெடிக்கல் பில்கள்  ERPயில் பதிவு செய்யப்படுவது இவற்றில் உள்ள குறைபாடுகளை, நிலுவையிலுள்ள பிரச்சனைகளை மாவட்ட மட்டத்தில் சங்க கடிதம் மூலமாக உடனடியாக கொடுத்து மாவட்ட மட்டத்தில் அதற்கான விவாதத்தை துவங்க வேண்டுமென மாநில சங்கம் வழிகாட்டுகிறது. 

இப்போது இப்பணியினை துவங்கினால் தான் அவை உடனடியாக ERPல்  அப்டேட் செய்யப்பட்டு செப்டம்பர் மாத இறுதியில் நிதி பட்டுவாடா செய்யப் படுவதற்கு உதவிகரமாக இருக்கும். 

மாவட்டங்கள் இப்பணியினை துரிதகதியில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம். 


தோழமையுடன் R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர் 
26.8.25

Post a Comment

0 Comments