AIBDPA TN
ஓய்வூதியம் மறுபரிசீலனை சட்டத்திற்கு எதிரான மாநில கருத்தரங்கம்
காலம் : 26.8.25 மதியம் 2 மணி முதல் 5 மணி வரை
இடம் : சென்னை ராஜா அண்ணாமலை மன்றம்.
தோழர்களே,
அகிலஇந்திய சிவில் ஓய்வூதிய அமைப்புகளின் கூட்டுக்குழு சார்பாக சென்னையில் நடைபெற உள்ள சிறப்பு கருத்தரங்கம் 26.8.25 அன்று மதியம் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.
இதில் நாமும் நம்முடைய முழுமையான பங்களிப்பை செலுத்த வேண்டும்.
கருத்தரங்கம் மூன்று மணி நேரம்தான் நடைபெறும்.
ஆகவே அருகாமை மாவட்டங்களில் உள்ள தோழர்கள் குறிப்பாக சென்னை, வேலூர், கடலூர், பாண்டி ஆகிய தோழர்கள் கணிசமான எண்ணிக்கையில் கலந்து கொள்வதற்கு திட்டமிட வேண்டும். தூரப்பகுதியில் உள்ளவர்கள் மாவட்டச் செயலாளர்கள், மாநில சங்க நிர்வாகிகள் என முக்கிய தோழர்கள் கலந்து கொள்வதற்கு திட்டமிடுவோம்.
அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.
காலையில் கிளம்பி மதியத்திற்குள் சென்னைக்கு வந்து சேரக்கூடிய தூரத்தில் உள்ள தோழர்கள் பயணங்களை அதற்கேற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளலாம்.
காலையில் வந்து சேரும் தோழர்கள் தகவல் தெரிவித்தால் காலையில் தங்குவதற்கும் காலைக் கடன்களை முடிப்பதற்கும் தங்குமிடம் மாநில சங்கம் ஏற்பாடு செய்து கொடுக்கும்.
ஓய்வூதியம் திருத்த சட்டத்திற்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம்.
மாநிலச் செயலாளர்.
6.8.25
0 Comments