Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்டச் செயற்குழு கூட்டம்

 சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்டச் செயற்குழு கூட்டம்





அன்புத் தோழர்களே ! வணக்கம்.

         AIBDPA தூத்துக்குடி மாவட்டச் சங்க செயற்குழு கூட்டம் இன்று 08-07-2025ல் தூத்துக்குடி  மாசிலாமணிபுரம் 3வது தெரு, தோழர். P C வேலாயுதம் அரங்கில் வைத்து தோழர். T. சுப்பிரமணியன் மாவட்டத் தலைவர் தலைமையில் சிறப்பாக  நடைபெற்றது. தோழர். K. சுப்பையா மாவட்ட உதவிச் செயலர் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். தோழர். V. குணசேகரன் மாவட்ட உதவிச் செயலர் வரவேற்புரை ஆற்றினார். தோழர். T. சுப்பிரமணியன் மாவட்டத் தலைவர் தலைமை உரையாற்றினார். 

           மாநில உதவித் தலைவர் மற்றும் மாவட்டச் செயலருமான தோழர். P. ராமர் துவக்க உரையாற்றியதோடு செயல்பாட்டு அறிக்கை முன் வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில் மாநிலச் செயற்குழு முடிவுகளான ஓய்வூதியர் முழக்கம்,  சந்தா ரூ 500/- , சங்க செயல்பாடுகளை முன்னெடுக்க ஆண்டு நன்கொடை ரூ 200/-, மகளிர் கிளை, 19.6.25ல் நடைபெற்ற  மாநில செயற்குழு முடிவுகள், 2025 நிதி மசோதாவில் ஓய்வூதியர்களுக்கு எதிரான பாதக நிலை, ஜூலை 9 அகில இந்திய வேலைநிறுத்தம், இன்றைய தேசிய பிரச்சனைகள், மத்திய மாநில சங்க செயல்பாடுகளை விளக்கி உரையாற்றினார்.

                 இன்றைய அளவில் மாவட்டத்தின் நிதிநிலை விபரங்களை முன்வைத்து மாவட்டப் பொருளாளர் தோழர் K.கணேசன் அறிக்கையிட்டார். விவாதத்தில் பல தோழர்கள் கலந்துகொண்டனர். மேலும் விடுபட்ட பிரச்சனைகளை முன்வைத்து கிளைச் செயலர்கள் பேசினர். விவாதங்களுக்கு விளக்கம் அளித்து மாவட்டச் செயலர் பேசினார். செயல்பாட்டு அறிக்கை, நிதிநிலை ஏகமனதாக ஏற்றிக்கொள்ளப்பட்டது. 

நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழர் K.கணேசன் நன்றி கூற செயற்குழு நிறைவுற்றது.

தோழமையுடன்
பெ.ராமர்
மாவட்டச்செயலர்
தூத்துக்குடி.

Post a Comment

0 Comments