Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற AIBDPA கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்.

 சிறப்பாக நடைபெற்ற AIBDPA கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்.






தோழர்களே ! வணக்கம். 

                  கடலூர்  மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (12.07.2025) மாவட்ட தலைவர் தோழர். N.மேகநாதன் தலைமையில் செஞ்சியில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக நமது சங்க கொடியினை மாவட்ட துணைத்தலைவர் தோழர். N. சுந்தரம் ஏற்றி வைத்தார். பின்னர் அஞ்சலி உரையை மாவட்ட துணைத்தலைவர்  தோழர். N.சுந்தரம்  வாசித்ததை தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. திண்டிவனம் கிளைச் செயலர் தோழர். S. ஜோசப் செயற்குழுவில் கலந்துகொண்டவர்களை வரவேற்று உரை நிகழ்த்தினார்.

          நமது மாநில செயலர் தோழர். R. ராஜசேகர் துவக்கவுரை ஆற்றினார். அவர் தனது உரையில் 1960 மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம், 2025 ஜூலை போராட்டத்தில் நமது பங்கேற்பு, பென்சன் மாற்றம், மெடிக்கல் பிரச்சினை, சொசைட்டி பிரச்சினை, CCA அலுவலகத்தில் தேங்கியுள்ள பிரச்சினைகள், நமது போராட்ட திட்டம் ஆகியவற்றை விரிவாக விளக்கி பேசினார்.

                 மாவட்ட செயற்குழுவிற்கான அஜெண்டா ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், மாவட்ட செயலர் தோழர். I.M.மதியழகன் செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். அறிக்கை மற்றும் அஜெண்டா மீது 11 தோழர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். விவாதத்தில் தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மாவட்ட செயலர்  விளக்கமளித்து விவாதத்தை முடித்து வைத்தார்.

              திண்டிவனம் கிளையில் புதிதாக இணைந்த தோழர்கள் கைத்தறி ஆடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். இறுதியில் மாவட்ட உதவிச் செயலர் தோழர். A. அண்ணாமலை நன்றி கூறினார்.

எடுக்கப்பட்ட முடிவுகள்

1. கிளைக்கூட்டங்கள்

  கிளைக்கூட்டங்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும்.கிளைக்கூட்டத்தில் மருத்துவ வசதி பற்றி உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும். முறையான பதிவேட்டில் கூட்ட நடவடிக்கைகளை பதிவு செய்திட வேண்டும்.

2.வரவுசெலவு கணக்கு கிளைகளில் பராமரிக்க வேண்டும்.

3. கிளை உறுப்பினர்களின் உயிர்வாழ் சான்றிதழ் (DLC) விபரத்தை கிளைச்சங்கம் பராமரிக்க வேண்டும். 

4. DRF சந்தா செலுத்திய உறுப்பினர்கள் விபரத்தை கிளைகளில் வைத்திருக்க வேண்டும். சந்தா செலுத்தாத உறுப்பினர்களிடம் கேட்டு பெறவேண்டும்.

5. பென்சனர் சந்திப்பு இயக்கம் தொடர்ந்து நடத்திட வேண்டும்.

6. உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

.            மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு மாவட்ட சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மாவட்ட செயற்குழு முடிவுகளை அமுலாக்கிட அனைவரும் இணைந்து செயல்படுவோம்.  

மாவட்ட செயற்குழு கூட்டத்தினை நடத்திட பொறுப்பேற்று, செஞ்சியில் சிறப்பாக நடைபெற அனைத்து வகையிலும் உதவிய திண்டிவனம் கிளைக்கு மாவட்ட சங்கத்தின் நன்றியை உரித்தாக்குகிறோம்.

தோழமையுடன்,
I.M.மதியழகன்
மாவட்ட செயலர்.
கடலூர் மாவட்டம்.

Post a Comment

0 Comments