கோவை மாவட்ட SBC கிளை பொதுக்குழு கூட்டம்
தோழர்களே
28.6.25 SBC கிளை பொதுக்குழு கூட்டம் கிளை தலைவர் தோழர் பொன்னுசாமி அவர்கள் தலைமையில் 60க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. அஞ்சலி நிகழ்ச்சி தோழர் ராஜசேகரன் கிளை பொருளாளர் நடத்தினார். கிளைச் செயலாளர் தோழர். அன்பழகன் ஜூலை 9. வேலை நிறுத்தம் பற்றியும் வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தொடர்ந்து வாழ்த்துரையாக தோழர்கள் N.P.ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர், B.நிசார் அஹமது, மாவட்ட உதவித்தலைவர் கே. சந்திரசேகரன் தோழர் மகேஸ்வரன் BSNLEU மாநிலத் தலைவர், தோழியர் பங்கஜவல்லி மாநில மகளிர் அமைப்புக் குழு,,தோழர் A.M.முத்தலிப் வாழ்த்துரை வழங்கினர்.
அடுத்து தோழர் ராஜசேகரன் கிளையின் வரவு செலவு கணக்குகளை தகவலுக்காக சமர்ப்பித்தார். வாழ்த்துரை வழங்கிய அனைத்து தோழர்களும் ஜூலை 9ஆம் தேதி நடைபெற இருக்கும் போராட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர் .நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக அகில இந்திய மாநாட்டு நிதியாக இரண்டாவது தவணை BSNLEU மாவட்டச் செயலாளரிடம் RS.20000/- வழங்கப்பட்டது. இறுதியாக மாவட்டச் செயலாளர் சிறப்புரை வழங்கினார். தோழர் K.T. ரவிச்சந்திரன் நன்றி கூட்டத்தை நிறைவு செய்தார்
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்
0 Comments