கோவை மாவட்டம் கணபதி கிளையின் மாதாந்திர பொதுக்கூட்டம்
தோழர்களே
30.6.25 கணபதி கிளையின் மாதாந்திர பொதுக்கூட்டம் கிளைத் தலைவர் தோழர். கே. சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் 27 உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. அஞ்சலி தோழர். சசி நடத்தினார். கிளை செயலாளர் தோழர். சந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தோழர் T.K.பிரசன்னா மாநில உதவி செயலாளர் பொதுக்குழு கூட்டத்தை துவக்கி வைத்து மாநில செயற்குழு அகில இந்திய சங்கம் பற்றி எடுத்துக் கூறி தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார். அடுத்து தோழர்கள் என்பி ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர், BSNLEU மாவட்டச் செயலாளர் தோழர் மகேஸ்வரன், TNTCWU மாவட்ட செயலாளர் தோழர் முத்தலிப், தோழர் பங்கஜவல்லி மகளிர் அமைப்பு மாநில குழு ஜூலை 9 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக வேண்டும் என வலியுறுத்தி தங்களது வாழ்த்து செய்திகளை நிறைவு செய்தனர்.
மாவட்ட செயலாளர் தோழர். குடியரசு மாவட்ட சங்க செயல்பாடு பற்றி எடுத்துரைத்தார். இறுதியாக தோழர் தங்கராஜ் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்
0 Comments