Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை எண் 24/25 ...dt.5 6 25

 AIBDPA TN சுற்றறிக்கை எண் 24/25 ...dt.5 6 25

1) மெடிக்கல் நிதி பட்டுவாடா ஜூன் 2025

2) பென்ஷன் அதாலத் 26.6.25

தோழர்களே !!

       1) ஜூன் 30 ஆம் தேதிக்குள் இந்த காலாண்டுக்கான நம்முடைய மெடிக்கல் பில் மட்டும் அலவன்ஸ் பட்டுவாடா செய்யப்படும். ஆகவே மாவட்ட செயலர்கள் மாவட்ட நிர்வாகத்தை சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் மெடிக்கல் பில்கள் ERPயில் அப்டேட் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஜூன் 15ஆம் தேதிக்குள் இப்பணிகளை இறுதி செய்யப்படும். 

ஆகவே நாம் சற்று கண்காணிப்புடன் இருந்து இந்த பணியினை செய்திட வேண்டும். 

2) பென்சன் அதாலத் 26.6.25 (சென்னை)

26.6.25 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. 

.             அதற்கான பிரச்சினையை கொடுப்பதற்கான கடைசி தேதி 14.06.25 ஆகவே மாவட்ட செயலர்கள் நம்மிடம் இருக்கும் பிரச்சனைகளை ஓய்வூதியர்களிடம் கையொப்பம் பெற்று CCA அலுவலகத்திற்கு அஞ்சல் மூலமாகவோ இ-மெயில் மூலமாகவோ உடனடியாக அனுப்பி வைக்கவும். 

மாநில செயலாளருக்கு அஞ்சல் மூலமாகவோ ஈமெயில் மூலமாகவோ நகல் அனுப்பி வைக்க வேண்டும். 

பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. 

தோழமையுடன் R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர் 
5 6 25

Post a Comment

0 Comments