Latest

10/recent/ticker-posts

அகில இந்திய அளவிலான NCCPA (online) கூட்ட முடிவுகள் !!

 AIBDPA TN Forum of Civil Pensioners Associations*

Formed to fight against the pension re-validation bill


ALL PENSIONERS MEETING TO UNITE AGAINST THE GOVERNMENT IS HELD TODAY!

The online meeting under the presidentship of Comrade Shiva Gopal Mishra is held today. More than 55 representatives from NCCPA and Non-NCCPA Federations / Associations attended. The decisions are as under:

1. A "Forum of Civil Pensioners Associations" was formed at the meeting comprising of President and "Chief Executives of all participating Federations /Associations and the future joining Associations. The meeting condemned the sinister move of the Government to adopt the validation amendment on 29.03.2025 to usurp the powers of the Court.

2. Court Case in Supreme Court will be filed against the validation amendment adopted by Parliament along with the Finance Bill 2025 through eminent Advocates. The expenditure will be shared by the Associations.

3.. All left-out Pensioners Organizations like State Government Pensioners etc will be contacted and a broad based unity will be established. Within a month another meeting (preferably online) with all will be conducted and united decisions for carrying forward the movement will be taken.

4. Eventhough, there was an urge as expressed by many to organize Human Chain in Districts; Convention and March to Governor at STATE HQRS; and All India Dharna and March and Memorandum to President of India, Prime Minister, Finance Minister and to Chief Justice at New Delhi, it was decided that in a war situation we should not agitate and the meeting of Pensioners Associations will decide the dates of Programme within one month.


United we win!

Divided we fall!

Unity is for struggle!


KR-SG-NCCPA

Representing AIBDPA, Coms. V A N Namboodiri, K G Jayaraj, M R Das and Manisha Biswas participated and spoke


அகில இந்திய அளவிலான NCCPA (online) கூட்ட முடிவுகள்


தோழர்களே!

ஒன்றிய அரசு நிதிமசோதா  சட்ட திருத்தம் மூலம் 29-03-2025 அன்று வெளியிட்ட உத்தரவு ஓய்வூதிய மாற்றத்திற்கு வேட்டுவைக்கும் வகையில் உள்ளதால்,

அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் தலைவர்கள் கூட்டம் தோழர். சிவ கோபால் மிஸ்ரா தலைமையில் இன்று (online ல்) நடைபெற்றது.

NCCPA மற்றும் NCCPA அல்லாத கூட்டமைப்புகள்/சங்கங்களைச் சேர்ந்த 55 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

(1) கூட்டத்தில் "பங்கேற்கும் அனைத்து கூட்டமைப்புகள்/சங்கங்களின் தலைமை நிர்வாகிகள் மற்றும் எதிர்காலத்தில் இணையும் சங்கங்களின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகிகள் அடங்கிய சிவில் ஓய்வூதியர்கள்  சங்கங்களின் கூட்டமைப்பு (Forum of Civil Pensioners Associations) அமைக்கபட்டது*     

             நீதிமன்றத்தின்    அதிகாரங்களைப்    பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு 29.03.2025 அன்று  சரிபார்ப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதை  கூட்டம் கண்டித்தது.

(2) நாடாளுமன்றத்தால் நிதி மசோதா 2025 உடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரிபார்ப்புத் திருத்தத்திற்கு எதிராக பிரபல வழக்கறிஞர்கள் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் செலவினங்கள் சங்கங்களால் பகிர்ந்து கொள்ளப்படும்.

(3) மாநில அரசு ஓய்வூதியர்கள் சங்கங்கள்  போன்ற அனைத்து விடுபட்ட ஓய்வூதியர் சங்கங்களும் தொடர்பு கொள்ளப்பட்டு பரந்த அடிப்படையிலான ஒற்றுமை உருவாக்கப்படும். ஒரு மாதத்திற்குள் அனைவருடனும் மற்றொரு கூட்டம் (முன்னுரிமையாக Online ல்) நடத்தப்பட்டு, இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒன்றுபட்ட முடிவுகள் எடுக்கப்படும்.

4) இருப்பினும், மாவட்டங்களில் மனிதச் சங்கிலியை ஏற்பாடு செய்ய பலர் வலியுறுத்தியது போல்; மாநில தலைமையகத்தில் கருத்தரங்கம், ஆளுநர் மாளிகை  நோக்கி பேரணி;  அகில இந்திய தர்ணா மற்றும் பேரணி மற்றும் இந்திய ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் புது தில்லியில் தலைமை நீதிபதி ஆகியோருக்கு மனுக்கள் கொடுப்பது -ஆகிய போராட்டத்திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டது

ஆயினும் இன்று எழுந்துள்ள ஒரு போர் எழும் சூழ்நிலையில் நாம் போராட்டத்தில் இறங்கக்கூடாது என்றும்,

மீண்டும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டத்தை ஒரு மாதத்திற்குள் நடத்தி மேற்கண்ட போராட்டத் திட்டத்தின் தேதிகளை முடிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஒன்றுபட்டால் வெற்றி !

பிரிந்தால் வீழ்வோம் !

ஒற்றுமை என்பது போராட்டத்திற்கானது !


தோழமையுள்ள

K.ராகவேந்திரன்

Secretary General, NCCPA


CHQ NEWS com.K.G.ஜெயராஜ்

General Secretary, AIBDPA


தோழமை வாழ்த்துக்களுடன்,
 எஸ்.நடராஜா
கன்வீனர் 
NCCPA 
திருநெல்வேலி மாவட்டம்.
03-05-2025

Post a Comment

0 Comments