Latest

10/recent/ticker-posts

மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் - 03-5-2025.

 மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் - 03-5-2025






அருமை தோழர்களே,

வணக்கம்....

           மதுரை AIBDPA வின் முதலாவது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர். M. செளந்தர் மாவட்ட தலைவர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அஞ்சலி உரையை தோழர். S. சுப்பிரமணியன் மாவட்ட அமைப்பு செயலர் நிகழ்த்தினார். தோழர். C. செல்வின் சத்தியராஜ் மாவட்ட செயலர் வரவேற்புரையும், ஆய்படுபொருள் விவாத குறிப்பின் மீது அறிமுக உரையும் நிகழ்த்தினார். தோழர்கள் விவாதத்தில் பங்கெடுத்தனர்.

                தோழர் S. ஜான் போர்ஜியா மாநில உதவி செயலர் சிறப்புரை நிகழ்த்தினார். பென்சன் மாற்றம், கமுடேசன் காலம் குறைப்பது, ஓன்றிய அரசின் மக்கள், தொழிலாளர் விரோத போக்கு மற்றும் மே 20 பொது வேலைநிறுத்தத்தில் நமது பங்கு போன்றவற்றை குறித்து விரிவாக பேசினார். தோழர். P. ரிச்சர்ட் மாவட்ட செயலர் BSNLEU, மற்றும் தோழர் M. சித்ராமணி மாவட்ட செயலர் TNTCWU வாழ்த்துரை வழங்கினார்கள்.

1.ஓய்வூதியர் முழக்கம்     200 பிரதிக்கு சந்தா சேர்ப்பது,

2.மாவட்ட செயலரின் மாவட்ட மையத்திற்கான தோழர்கள் முன்மோழிவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மாவட்ட மையம் கீழ்கண்ட தோழர்கள்*

M. செளந்தர்

C.செல்வின் சத்தியராஜ்

R. சண்முக வேல்

G. சுந்தரராஜ்

P. கணேசன்

G. சந்திரமோகன்

C. தனபால்

K. விஜயகுமார்

ஆகிய தோழர்களால் இயங்கும்.

இறுதியாக தோழர். R. சண்முகவேல் மாவட்ட பொருளாளர் நன்றிகூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

தோழர்களின் பார்வைக்காக செயற்குழுவின் விவாத குறிப்பை இந்த குழுவில் பதிவிடுகிறேன்.

தோழமையுடன்

C. சேல்வின் சத்தியராஜ் DS AIBDPA மதுரை

Post a Comment

0 Comments