Latest

10/recent/ticker-posts

CENTRAL EXECUTIVE COMMITTEE MEETING (7.5.25) DECISIONS.

 AIBDPA TN  CENTRAL EXECUTIVE COMMITTEE MEETING (7.5.25) DECISIONS.


            The CEC Meeting was held virtually from 2PM to 7.30 PM on 07-05-2025. Com. M. R. Das, President presided over the meeting. Com. K. G Jayaraj moved the condolence resolution and welcomed all. The meeting congratulated and saluted the Indian Armed Forces for giving a fitting reply to the Pakisthan sponsored terrorist murder of 26 innocent people st Pahalgam.

                 Com. V A N Namboodiri inaugurated the meeting with a brief but enthusiastic speech. Thereafter Com. K. G. Jayaraj presented the report on activities for the intervening period since last CEC held at New Delhi on 12-11-2024. Com. M. G S Kurup presented the unaudited accounts for the year 2024-25. 30 comrades participated in the dicussion that followed and raised several issues and put forward valuable suggestions also. General Secretary replied to the points raised in the discussion.

The CEC Meeting took the following decisions.

(1) Authorised CHQ to chalk out appropriate agitational program for pension revision.

(2) AIBDPA should demand NCCPA to formulate strong agitation Program against validation of Pension Rules Amendment incorporated in the Finance Bill, 2025.

(3) Decided to organise solidarity Dharna in support of the General Strike on 20-05-2025.

(4) Organise Protest demonstration / Dharna at District level on 02-06-2025 against the continuing denial of regular pension and retirement benfits to the 170 ST VRS Retirees of Maharashtra in violation of rules. Email to be sent to Hon'ble Minister of Communications, Secretary, DoT and CMD, BSNL demanding immediate settlement.

(5) Unanimously nominated Com. R S Chouhan, NTR, New Delhi as AGS in the vacant post.

(6) AIC fund @ of ₹ 50 per member be collected and sent directly to the Reception Committee, Coimbatore.

(7) ₹ 5 per member has to be donated to NCCPA as working fund by all the District branches. The amount be sent to CHQ for consolidated payment to NCCPA.

(8) A three member committee was formed with Com. Susanta Kr. Ghosh Vice President, Com. Omprakash Singh, Organising Secretary and Com. Asis Das, Circle Secretary, West Bengal to complete the election of office bearers of Kolkata Telephones Circle.

(9) Decided to accept the  invitation of TUI (P&R) to Com. K. G. Jayaraj to join the TUI(P&R) delegation to the 113 ILO Conference at Geneva on 9-11, June, 2025 and bear the expenditure.

(10) The CEC constituted a committee for amendments to the Constitution with Coms. P. Ashokababu, S. Mohandoss, Susanta Ghosh and R. Muraleedharan Nair. 

The CEC Meeting came to an end with the concluding speech and vote of thanks by Com. M. R. Das.

Detailed Circular will follow.

K G Jayaraj 
General Secretary.

 7.5.2025 மத்திய செயற்குழு கூட்ட  முடிவுகள்.


CEC கூட்டம் கடந்த 07-05-2025 அன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை மெய்நிகர் முறையில் நடைபெற்றது. 

கூட்டத்திற்குத் தலைவர் தோழர். எம். ஆர். தாஸ் தலைமை தாங்கினார். தோழர். கே. ஜி. ஜெயராஜ் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து, அனைவரையும் வரவேற்றார். பஹல்காமில் 26 அப்பாவிப் பொது மக்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் படுகொலை செய்ததற்கு பொருத்தமான பதிலடி கொடுத்ததற்காக இந்திய ஆயுதப் படைகளை கூட்டம் பாராட்டி வணக்கம் செலுத்தியது.

தோழர். வி. ஏ. என். நம்பூதிரி ஒரு சுருக்கமான ஆனால் உற்சாகமான உரையுடன் தனக்கே உரிய பாணியில் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். 

அதன் பிறகு, பொதுச் செயலர் தோழர். கே. ஜி. ஜெயராஜ் 12-11-2024 அன்று புது தில்லியில் நடைபெற்ற கடைசி CEC கூட்டம் முதல் இடைப்பட்ட காலத்திற்கான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வழங்கினார்.  2024-25 ஆம் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்படாத கணக்குகளை பொருளாளர் எம். ஜி.எஸ். குருப் சமர்ப்பித்தார். 

அதைத் தொடர்ந்து நடந்த விவாதத்தில் 30 தோழர்கள் பங்கேற்று பல பிரச்சினைகளை எழுப்பியதோடு மதிப்புமிக்க ஆலோசனைகளை யும் முன்வைத்தனர். விவாதத்தில் எழுப்பப்பட்ட கருத்துகளுக்கு பொதுச் செயலாளர் பதிலளித்தார்.

CEC கூட்டம் பின்வரும் முடிவுகளை எடுத்தது.

(1) ஓய்வூதிய மாற்றத்திற்கான போராட்ட திட்டத்தை வகுக்க CHQவிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

(2) 2025 நிதி மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ள ஓய்வூதிய விதிகள் திருத்தத்தை சரிபார்ப்பதற்கு எதிராக வலுவான போராட்டத் திட்டத்தை வடிக்க AIBDPA சங்கம், NCCPA-வை கோர வேண்டும்.

(3) 20-05-2025 அன்று நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக  தர்ணாவை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
 
(4) விதிகளை மீறி, மராட்டியத்தைச் சேர்ந்த 170 ST VRSல் ஓய்வு பெற்றவர்களுக்கு, வழக்கமான ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் வழங்க தொடர்ந்து மறுக்கப்படுவதை எதிர்த்து 02-06-2025 அன்று மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் / தர்ணா நடத்துவது. மற்றும்,  உடனடியாக தீர்வு காணக் கோரி மாண்புமிகு தகவல் தொடர்பு அமைச்சர், DoT செயலாளர் மற்றும் CMD, BSNL ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்புவது.

(5) காலியாக உள்ள AGS பதவிக்கு தோழர் R S சௌஹான், NTR, புது தில்லி, அவர்கள் ஒருமனதாக பரிந்துரைக்கப்பட்டார்.

(6) ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் ரூபாய் 50/- நன்கொடையை அகில இந்திய மாநாட்டிற்கு வசூல் செய்து, அதை நேரடியாக கோயம்புத்தூரில் அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழுவிற்கு அனுப்புவது.

(7) அனைத்து மாவட்டக் கிளைகளாலும் NCCPAவின் செயல்பாட்டிற்கு உதவியாக ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் ரூபாய்5/- நன்கொடை வசூல் செய்து, மாவட்ட சங்கங்கள் CHQ விற்கு அனுப்ப வேண்டும்.

(8) மேற்கு வங்க மாநில நிர்வாகிகள் தேர்தலை நடத்த, தோழர் சுசாந்தா கிரு. கோஷ், அகில இந்திய துணைத் தலைவர், தோழர் ஓம்பிரகாஷ் சிங், அகில இந்திய அமைப்புச் செயலாளர், மற்றும் தோழர் ஆஸிஸ் தாஸ் மாநிலச் செயலர், ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு அமைக்கப்பட்டது. 

(9) ஜூன் 9-11, 2025 அன்று ஜெனீவாவில் நடைபெறும் 113வது ILO மாநாட்டில் TUI(P&R) பிரதிநிதிகள் குழுவில் சேர தோழர் கே. ஜி. ஜெயராஜுக்கு TUI (P&R) விடுத்த அழைப்பை ஏற்று, அவரது பயணச் செலவினங்களை CHQ ஏற்க முடிவு செய்யப்பட்டது.

10) சங்க சட்ட அமைப்பு விதி திருத்தங்களை மேற்கொள்ள,
தோழர்கள் பி. அசோகபாபு, எஸ். மோகன்தாஸ், சுசாந்தா கோஷ் மற்றும் ஆர். முரளீதரன் நாயர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இறுதியாக தோழர் எம். ஆர். தாஸின் நன்றியுரையுடன் CEC கூட்டம் முடிவுக்கு வந்தது.

விரிவான சுற்றறிக்கை தொடர்ந்து வெளியிடப்படும்.

கே. ஜி. ஜெயராஜ்
பொதுச் செயலாளர்.

Post a Comment

0 Comments