Latest

10/recent/ticker-posts

COC கூட்டமைப்பின் அறைகூவலை வெற்றி பெற செய்வோம் !!

 BSNLEU, AIBDPA, BSNLCCEF கூட்டமைப்பின் அறைகூவலை வெற்றி பெற செய்வோம்

             நமது BSNL COC கூட்டமைப்பின் சார்பில் 7.10.24 அன்று நடந்த கூட்டத்தில் முடிவெடுத்தபடி, கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 25.10.24 நாடு முழுவதும் வலிமையான ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி கேட்டுக் கொள்கிறோம்.

1. சம்பள மாற்றம், பென்ஷன் மாற்றம் இரண்டும் உடனே நிறைவேற்றப்பட வேண்டும்.

    BSNL ஊழியர், அதிகாரிகளுக்கான சம்பள ரிவிஷன் 01.01.17 ல் இருந்து நிலுவையில் உள்ளது. 1.01.2007 க்குப் பிறகு 17 வருடங்களாக சம்பள மாற்றம் ஏற்படவில்லை. மூன்றாவது சப்பளக் குழு 15%  உயர்வுக்கு பரிந்துரைத்திருந்தும், நிர்வாகம் அதை, நிறுவனத்தின் நஷ்டத்துடன் சம்பந்தப்படுத்தி, மறுத்து வருகிறது. BSNL நிறுவனம் நிதி குறைந்ததற்கு அரசும், அரசின் பொதுத்துறைக்கு எதிரான, BSNL க்கு எதிரான கொள்கைகள் தான் காரணம். இதற்கு ஊழியர்களை காரணமாக்கும் எண்ணத்தை ஏற்க முடியாது. 

              BSNL, 100%  அரசு சார்ந்த, அரசுத் துறையில் இருந்து பொதுத்துறையாக மாற்றப்பட்ட நிறுவனமாகும். அவ்வாறு மாற்றப்பட்ட போது, ஊழியர்களின் அனைத்து நலன்களும் பேசப்படும் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டது. எனவே, அரசு தன் நிதி ஏற்பாடுகளைக் கொண்டே, சம்பள மாற்றத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கடப்பாடும் உள்ளது. 

              உதாரணமாக, கேரளாவில் KSRTC ன் ஆரம்ப நிலையில், சம்பள உயர்வு தர முடியாத நிலை ஏற்பட்ட போது, கேரள அரசு தானாக முன்வந்து, தன் நிதி ஆதாரத்தை வைத்து, அவர்களுக்கு சம்பள மாற்றத்தை நிறைவேற்றியது. அதைப் போல அரசு, BSNL நிர்வாகத்துடன் சேர்ந்து, ஏற்கெனவே ஒத்துக் கொள்ளப்பட்ட புதிய சம்பள விகிதங்களுடன் சம்பள மாற்றத்தை நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதியர்களைப் பொறுத்தவரை, ஏற்கெனவே BSNL நிறுவனத்திடம் இருந்து அவர்களுக்கான நிதி ஆதாரம் பென்ஷன் நிதி என்று பெறப்பட்டதால், 15%  பென்ஷன் உயர்வை உடனே அமல் படுத்த வேண்டும்.

2. 4G,5G சேவைகளை விரைவில் அமல் படுத்துதல்.

.             மத்திய அரசு, புதிய தொழிற்நுட்பங்களை அமல்படுத்துவதில் BSNL க்கு பாரபட்சம் காண்பிக்கிறது. தனியார் நிறுவனங்களுக்குத் தரப்படும் உதவிகள் bsnl நிறுவனத்திற்கு அளிக்கப்படுவதில்லை. மொபைல் சேவைகள் தனியார் நிறுவனங்கள் ஆரம்பித்த பல வருடங்களுக்குப் பிறகே, BSNL க்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

3G சேவையும் அது போலவே. கடந்த காலத்தில் 4 G சேவைகளைத் தனியார்கள் ஆரம்பித்த பொழுது, சில செயற்கையான காரணங்களை வைத்து, bsnl க்கு அது மறுக்கப்பட்டது. Bsnl நிறுவனத்திற்கும், அதன் சந்தாதாரர்களுக்கும் 4G, 5G சேவைகள் உடனே வழங்கப்பட வேண்டும்.

3. BSNL தரும் இரண்டாவது VRS

               இரண்டாவது முறையாக நிறுவனத்தில் விருப்ப ஓய்வு வரவிருப்பதாக அறிகிறோம். சம்பளத்திற்கான நிதி அளவைக் குறைப்பதற்கான முயற்சி இது என்று சொல்லப்படுகிறது. நிறுவனம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே விருப்ப ஓய்வு பற்றி நிர்வாகம் பேசிக் கொண்டுள்ளது. 

முதலிரண்டு முறை, தொழிற்சங்க எதிர்ப்பால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பயத்தையும், என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்பின்மையையும் ஏற்படுத்தியதால், 80000 ஊழியர், அதிகாரிகள் மூன்றாவது முறை, 2020ல் வந்த முதல் விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

.        தற்போது 56000 நபர்கள் (29000 அதிகாரிகள், 27000 ஊழியர்கள்) நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இந்த இரண்டாவது விருப்ப ஓய்வுத் திட்டம் கைவிடப்பட வேண்டும்.

4. ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், ESI, EPF இவற்றை அமல் படுத்துதல்.

            ஒப்பந்த ஊழியர்கள் மனிதாபிமானமற்ற விதங்களில் பணியமர்த்தப்பட்ட போது, BSNLCCWF, 2006 ல் உருவான பிறகு, அவர்கள் மேற்கொண்ட பலதரப்பட்ட போராட்டங்களுக்குப் பிறகே, ESI, EPF, குறைந்த பட்ச ஊதியம் போன்றவை கிடைத்தன. பாராளுமன்ற நிலைக்கமிட்டி முடிவெடுத்து, பரிந்துரைத்த பிறகுதான் அமல்படுத்தப்பட்டது.

        BSNL உருவாக்கப்பட்ட சமயத்தில் 1 லட்சம் ஒப்பந்த ஊழியர்கள் இருந்தனர். கோவிட் சமயத்தில் தன்னிச்சையாக 70000 ஒப்பந்த ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், போராட்டம் மூலம் பெறப்பட்ட சலுகைகள் பலவும் ரத்து செய்யப்பட்டன. பல இடங்களில் ESI, EPF பிடிக்கப்படாமல் சமூகப் பாதுகாப்பு அவர்களுக்கு மறுக்கப்பட்டது. இவை மீண்டும் தரப்பட வேண்டும் என்பது சமூகக் கடமை ஆகும்.

5. காஷுவல் ஊழியர்களுக்கு 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரை, DA வழங்கல் போன்றவை.

    DOT நிர்வாகத்தில் இருந்த பொழுது ஒரு சில காரண காரியங்களின்படி, ஒரு வருடம் தொடர்ந்து பணி புரிந்தால் என, காஷுவல் ஊழியர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டனர். BSNL உருவாக்கத்திற்குப் பிறகு, சில காரியங்களை அவர்கள் முடித்திருந்தால் நிரந்தரமாகப் படுவார்கள் என்ற உறுதியின் படி, 2006ல், 4000 பேர் நிரந்தரமாக்கப்பட்டனர். ஆனால் அது உச்சநீதிமன்ற  உத்தரவு ஒன்றின்படி, கர்னாடகா மின்சார வாரியம் ஊழியர்கள் வழக்கின் படி, நிறுத்திவைக்கப்பட்டது. 

          அவர்கள் இன்றும் காஷுவல் ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். 7வது சம்பளக் கமிஷன்படி குறைந்தபட்ச ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். Bsnl நிர்வாகம் தன்னிச்சையாக அவர்களுக்கு கு. ப. ஊதியம் வழங்கப்பட வேண்டியதில்லை என்று முடிவு செய்தது. குறைந்த பட்ச ஊதியம், CPC படி, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

மேலும் CDAவின் படி DA வும் சேர்த்து வழங்கப்பட வேண்டும். 

            மேற்கண்ட கோரிக்கைகளுக்காக, தொழிற்சங்க போராட்டங்களைக் கட்டமைப்பதுவென 7.10.24 அன்று நடந்த கூட்டமைப்பு சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது. பெரும் திரளான அளவில் உறுப்பினர்கள் இந்த இயக்கங்களில் பங்கெடுக்க வேண்டும். 

            ஆர்ப்பாட்டத்தை பெரும்பான்மை ஊழியர்கள், ஓய்வு பெற்ற தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்று வெற்றி பெறச் செய்வோம் !!

BSNLEU, AIBDPA, BSNLCCWF கூட்டமைப்பு Zindabad. 

VAN நம்பூதிரி. 
24.10.2024.
Fwd 
R.ராஜ சேகர்
மாநில செயலர்

25.10.24.

Post a Comment

0 Comments