Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற AIBDPA நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் ...!!

 சிறப்பாக நடைபெற்ற AIBDPAநெல்லை மாவட்ட செயற்குழு ...




 தோழர்களே ! வணக்கம்.

             திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்ட செயற்குழு கூட்டம்  24.10.2024 வியாழக்கிழமை அன்று மாவட்ட தலைவர் தோழர். M. கனகமணி தலைமையில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை BSNLEU அலுவலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் தோழர் . S. சங்கரநாராயணன் அஞ்சலிவுரை ஆற்றினார். மாவட்ட செயலர் தோழர் S. முத்துசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

               செயற்குழுவிற்கான அஜெண்டா ஒப்புதல் பெறப்பட்டது.

        AIBDPA அகில இந்திய துணைத் தலைவர் தோழர்  S.மோகன்தாஸ் 2024 டிசம்பர் மாதம் 19 & 20 தேதிகளில் திருச்சியில் நடைபெறவுள்ள நமது தமிழ் மாநில மாநாடு பற்றியும், பென்சன் மாற்றம் பிரச்சினையில் நமது நிலைபாடு, OPS, NPS, UPS ஆகியவை குறித்தும்,  மாற்று திறனாளிகள் போராட்டம், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் பற்றியும் விரிவாக விளக்கி துவக்க உரையாற்றினார். 

        மாநில பொருளாளர் தோழர். S.நடராஜா மற்றும் அகில இந்திய உதவி பொருளாளர் தோழர். V. சீதாலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். BSNLEU மாவட்ட செயலாளர் தோழர். N. சூசை மரிய அந்தோணி வியாகப்பன் மற்றும் TNTCWU மாவட்ட செயலாளர் தோழர். P. ராஜகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

            கிளைச் செயலாளர்கள் அனைவரும் அமைப்பு நிலை விவாதத்தில் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட உதவி தலைவர்கள் தோழர். R. ராமநாதன் மற்றும் தோழர் C. சுவாமி குருநாதன் ஆகியோர் மாநில மாநாட்டு நன்கொடை பற்றியும் நமது மாவட்டத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 10 சார்பாளர்கள் தேர்வு செய்யும் முறை பற்றி தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.

         நன்கொடை அறிவித்த உடனே, அம்பாசமுத்திரம் கிளை ரூபாய் 5000, பாளையங்கோட்டை கிளை ரூபாய் 5000, தென்காசி கிளை ரூபாய் 5000, சங்கரன்கோயில் கிளை ரூபாய் 3000, திருநெல்வேலி கிளை ரூபாய் 1000 என கிளைகள் நன்கொடை வழங்கியது. முதல் தவணையாக வரவேற்பு குழுவிற்கு திருநெல்வேலி மாவட்ட சங்கத்தின் சார்பில் ரூபாய் 20,000/= (ரூபாய் இருபது ஆயிரம்) அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

எடுக்கப்பட்ட இதற முடிவுகள்,

1. மாநில மாநாட்டிற்கு நன்கொடையாக ஒவ்வொரு கிளைகளும் ரூபாய் 8 ஆயிரமும் ஆனால் சங்கரன்கோவில் கிளை ரூபாய் 5000 மட்டும் கொடுக்க வேண்டும் .

2.டெலிகேட் கட்டணம் ரூபாய் ஆயிரத்தை மாவட்ட சங்கம் ஏற்றுக்கொள்ளும்.

3. கிளைக்கு ஒரு டெலிகேட் என்ற அடிப்படையில் எடுக்க வேண்டும். மாவட்ட தலைவர் ,மாவட்ட பொருளாளர் ஆகியோர் டெலிகேட்டாக வருவார்கள்.

4. ஒரு மகளிர் சார்பாளராக தேர்வு செய்ய வேண்டும்.

5. ஒரு அதிகாரி ஓய்வூதியர் சார்பாளராக தேர்வு செய்ய வேண்டும் 

6. கிளைக் கூட்டங்களை இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது கூட்ட வேண்டும்.

இறுதியில் ,

மாவட்ட செயற்குழுவை சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு நல்கிய கிளைச் செயலாளர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் அனைவருக்கும் மாவட்ட உதவி தலைவர் தோழர்.  C. சுவாமிகுருநாதன் நன்றி கூறினார்.

மாவட்ட செயற்குழுவின் முடிவுகளை அமுலாக்கிட அனைவரும் இணைந்து செயல்படுவோம்.  

நன்றி தோழர்களே,

தோழமையுடன்,
 ச.முத்துசாமி ,
மாவட்ட செயலாளர்,
திருநெல்வேலி மாவட்டம்.

24-10-2024.

Post a Comment

0 Comments