Latest

10/recent/ticker-posts

NCCPA இணைப்பு குழு கூட்டம் - 24.10.23 - சென்னை

NCCPA இணைப்பு குழு கூட்டம் - 24.10.23 - சென்னை

தோழர்களே,
           வரும் டிசம்பர் 13-14 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ள NCCPA அகில இந்திய மாநாட்டை ஒட்டி தமிழ் மாநில NCCPA குழுவின் இணைப்பு குழு கூட்டம் 24-10-2023 அன்று சென்னை பூக்கடை தொலைபேசி வளாகத்தில் உள்ள BSNL ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

                   தலைவர் தோழர். P.மோகன் தலைமை தாங்க, தோழர் CKN கூட்டத்தை நடத்தினார். நமது மாநில சங்கத்திலிருந்து மாநிலத் தலைவர் தோழர் CKN, மாநிலச் செயலாளர் ராஜசேகர், மாநில துணைத்தலைவர் தோழர். பி. மாணிக்க மூர்த்தி சென்னை தொலைபேசியில் இருந்து தோழர் கோவிந்தராஜ் தோழர் குப்பன் மற்றும் AIPRPA தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

ரயில்வே பகுதியிலிருந்து சில காரணங்களால் கலந்து கொள்ள இயல வில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

Income Tax பகுதியிலிருந்து தகவல் ஏதும் இல்லை.

             தொடர்ந்து நடைபெற்ற வேலைகள் ரிப்போர்ட் செய்யப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது. அனைத்து வேலைகளும் மிக சிறப்பாக நடைபெற்று இருக்கின்றன. இனி நமது பணி நிதி வசூலை செய்து அதனை முழுமையாக ஒப்படைப்பது தான். இதுவரை செய்த செலவு அத்தனையும் AIPRPA சங்க பணம்தான்.

     இனிமேல்தான் மற்றவர்கள் தங்களுடைய பங்களிப்பை செலுத்த வேண்டும். ஆகவே நாம் நம்முடைய பங்களிப்பை உடனடியாக செலுத்த வேண்டும்.
       31.10.23 க்குள் நம்முடைய தொகையினை வரவேற்பு குழுவிடம் இடம் ஒப்படைப்போம். மீதமுள்ள தொகையை நவம்பர் பத்துக்குள் கொடுத்து விட வேண்டும்.

அடுத்த 15 நாட்களுக்கு நம்முடைய பணி என்பது NCCPA அகில இந்திய மாநாட்டுக்கான நிதி வசூல் மட்டுமே இருக்கட்டும்.

இந்த வேலைக்கு நாம் முன்னுரிமை கொடுப்போம்.

தோழமை வாழ்த்துக்களுடன்,
*R.ராஜ சேகர்*
*மாநிலச் செயலாளர்*
25 10 23

Post a Comment

0 Comments