Latest

10/recent/ticker-posts

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ மின்சார அடுப்பு - திருச்சி மாவட்ட AIBDPA சங்கத்தின் சமூக உதவி !!

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ மின்சார அடுப்பு - திருச்சி மாவட்ட AIBDPA சங்கத்தின் சமூக உதவி !!

மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது பாராட்டுகிறது

AIBDPA. TRICHY ,நமது AIPDBA அமைப்பு தினம் 21 .10 .2023 அன்று திருச்சியில் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

     அதன் ஒரு பகுதியாக 25.10.2023 அன்று மாநிலச் செயலாளரின் அறிவுரைத்தல்படி சமூக நோக்கத்தோடு இந்த தினத்தை கொண்டாட வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் கரூரில் உள்ள ஊ.ஒ.நடுநிலை பள்ளியில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்கள் உபயோகப்படுத்துவதற்கு வேண்டி இண்டக்ஷன் ஸ்டவ் திருச்சி மாவட்டத்தின் சார்பில் வாங்கி கொடுக்கப்பட்டது.

          இந்த நிகழ்ச்சியில் தோழர் K.சின்னையன் மாவட்ட செயலாளர், தோழர் T. தேவராஜன் மாநில அமைப்பு செயலாளர், தோழர் .T மனோகரன் கிளைச் செயலாளர், கிளை தோழர்கள். P. நாகராஜன், G.ராமச்சந்திரன், முருகேசன், ராமசாமி, ஜி.பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஜான் பாஷா மாவட்ட தலைவர் பேசினார்.

        அதன்பின்பு அப்பள்ளியின் ஆசிரியர். திரு திலகவதி அவர்களிடம் வழங்கப்பட்ட இன்டக்ஷன் ஸ்டவ்வை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு வழிகாட்டிய மாநில செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
*K .சின்னையன்*
*மாவட்ட செயலாளர்* திருச்சி

Post a Comment

0 Comments