Latest

10/recent/ticker-posts

பாராட்டும்படி நடைபெற்ற சேலம் மாவட்டம் திருச்செங்கோடு கிளை மாநாடு !!

AIBDPA சேலம் மாவட்டம் திருச்செங்கோடு கிளை மாநாடு 25.10.2023 ல் அனைவரும் பாராட்டும்படி நடந்துள்ளது

   




          AIBDPA சங்கக்கொடியினை மூத்த தோழர் A.அருணாச்சலம்(86) அவர்கள் ஏற்றி வைத்தார். கிளைத் தலைவர் தோழர் M.குமரேசன் SDE Retd அவர்கள் மாநாட்டிற்கு தலைமை ஏற்க, தோழர். K.செல்வராஜூ JE Retd அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

AIBDPA DOS தோழர் V.நாராயணன் அனைவரையும் வரவேற்றார். ACS தோழர் T. பழனி அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.

     AIBDPA மாநில துணைத் தலைவர் தோழர் N.குப்புசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தம் உரையில் AIBDPA உருவாகி வந்த பாதை, ஓய்வூதியர் கோரிக்கைகளில் விடாமல் போராடி பெற்றுத் தந்தவை, 15% உயர்வுடன் பென்ஷன் மாற்றத்திற்காக நடத்தும் இயக்கங்கள், நமது எதிர் கால கடமைகள் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

தோழர் K. ராஜன் DP TNTCWU அவர்கள் கருத்துரை வழங்கி வாழ்த்திப் பேசினார். ஆண்டறிக்கை, வரவு செலவு சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கப்பட்டது.

        புதிய நிர்வாகிகள் தேர்வில் கிளைத் தலைவர், செயலர், பொருளராக முறையே M. குமரேசன், M.ராஜலிங்கம், S.சீனிவாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்*

புதிய நிர்வாகிகளை கீழ்கண்ட தோழர்கள் வாழ்த்திப் பேசினார்கள்.

1) S. தமிழ்மணி DS
2) S.அழகிரிசாமி ADS
3) A.கந்தசாமி BS SKG
4) P.M.ராஜேந்திரன் BS RSP
5) P. சண்முகம் BS IDP
6) D. சுப்பிரமணி BS SLM Main
7) V.பரந்தாமன் BS BSNLEU TCD
8) தாமரைச் செல்வன் DOS BSNLEU

இறுதியில் தோழர் M.ராஜலிங்கம் BS AIBDPA அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி மாநாட்டினை நிறைவு செய்தார்.

Post a Comment

0 Comments