பாராட்டும்படி நடந்து முடிந்த AIBDPA சேலம் மாவட்ட எடப்பாடி கிளை மாநாடு
October 28, 2023
பாராட்டும்படி நடந்து முடிந்த AIBDPA சேலம் மாவட்ட எடப்பாடி கிளை மாநாடு
29.10.2023 ஞாயிறு காலை 11 மணிக்கு AIBDPA சேலம் மாவட்டம் எடப்பாடி கிளை மாநாடு தோழர். T. பழனி, ACS அவர்களின் துவக்க உரையுடன் தொடங்கியது. முன்னதாக தோழர். M.P.ஜெகநாதன் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த, கிளைச் செயலர் தோழர். P.சண்முகம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
AIBDPA மாவட்டத் தலைவர் தோழர். M. மதியழகன், மாவட்டச் செயலர் தோழர். S. தமிழ்மணி, BSNLEU மாவட்டச் செயலர் தோழர். E. கோபால் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
ஆண்டறிக்கை, வரவு செலவு ஏற்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிளைத் தலைவர், செயலர், பொருளாளராக தோழர்கள் S. விஜயசுந்தரம்,P. சண்முகம், D. சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளை கீழ்க்கண்ட தோழர்கள் வாழ்த்திப் பேசினர்.
1) S. அழகிரிசாமி ADS AIBDPA 2) K. சண்முகசுந்தரம் DOS BSNLEU 3) M.ராஜலிங்கம் BS AIBDPA TCD 4) A. கந்தசாமி BS AIBDPA SKG 5) P.M.ராஜேந்திரன் BS AIBDPA RSP 6) K. ராஜன் DP TNTCWU
0 Comments