bதற்போது ஓய்வூதியர்களுக்கு 80 வயது பூர்த்தியடைந்த பின்னர்தான் 20% கூடுதல் பென்சன் வழங்கப்பட்டுவருகிறது.
அஸ்ஸாம் ஓய்வூதியர் ஒருவர் 79 வயது பூர்த்தியானதும் 80ஆவது பிறந்தநாளிலேயே 20% கூடுதல் பென்சனை வழங்கவேண்டுமெனக் கோரி 2018ம் ஆண்டு கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அதை எதிர்த்து மத்தியஅரசு டெல்லி உச்சநீதிமன்றத்தில் 2019ல் மேல்முறையீடு செய்ததை ஏற்கமறுத்து தள்ளுபடி செய்து கௌஹாத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உச்சநீதிமன்றமும் உறுதிசெய்து தீர்ப்பளித்தது. இது ஓய்வூதியர் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.
உச்சநீதிமன்றம் ஒரு ஓய்வூதியரது வழக்கில் அளித்த தீர்ப்பு அதே சட்டதிட்டங்களினபடி ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் பொருந்தும் என்பதால் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 80வது பிறந்தநாளில் 20% கூடுதல் பென்சனை வழங்குவதற்கான அரசாணையை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை.
ஆகவே தோழர்.சிவ்கோபால் மிஸ்ரா (Staffside Secretary, National JCM & President, NCCPA) அவர்கள் இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பைச்சுட்டிக்காட்டி அதற்கான அரசாணையை உடனே வெளியிடுமாறு வலியுறுத்தி 26-8-2021ல் கடிதம் எழுதியுள்ளார்.அது இன்னும் அரசின் பரிசீலனையில் உள்ளது.
மத்திய அரசு அதை ஏற்றுக்கொண்டு அமுலாக்கும் என உறுதியாக எதிர்பார்க்கிறோம். அதன்பலனாக 80 வயது முடியும்வரை காத்திருக்காமல், ஓராண்டு முன்னதாகவே, 79 வயது முடிந்ததும் 20%கூடுதல் பென்சனைப்பெறும் நல்வாய்ப்பு நமக்கு கிட்டும்.
*(தகவல்: தோழர்.VAN.நம்பூதிரி அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து).*.....
0 Comments