எழுச்சியாக நடைபெற்ற ஈரோடு மாவட்ட பெருந்துறை சென்னிமலை கிளைகள் இணைந்த மாநாடு !!
October 21, 2023
AIBDPA- ஈரோடு மாவட்ட சிறப்பான ஏற்பாடுகள் உடன் எழுச்சியாக நடைபெற்ற பெருந்துறை சென்னிமலை கிளைகள் இணைந்த மாநாடு
AIBDPA- ஈரோடு மாவட்ட பெருந்துறை & சென்னிமலை கிளைகள் இணைந்த மாநாடு 22.10.23 ஞாயிறு காலை கொடியேற்றத்துடன் சிறப்பாக மாநாடு துவங்கியது. தேசிய கொடியை மாநில துணை தலைவர் தோழர். N. குப்புசாமியும், சங்க கொடியை தோழர். மயில்சாமி அவர்களும் ஏற்றி வைத்தனர். மாநாட்டிற்கு கிளை தலைவர்கள் தோழர். M. S. பழனிசாமி மற்றும் தோழர். ரங்கசாமி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.
முன்னாள் கிளை செயலாளர் தோழர். C. P. சுப்பிரமணியம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பெருந்துறை கிளை பொருப்பு செயலாளர் தோழர். ஈஸ்வரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் தோழர் சின்னசாமி அவர்கள் மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
பின்னர் மாநாடு அமைப்பு தின கருத்தரங்கத்தை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டது. மதிய உணவுக்கு பின்னர் மாநாடு மீண்டும் துவங்கியது. பெருந்துறை கிளை சார்பாக தோழர் ஈஸ்வரன் அவர்களும், சென்னிமலை கிளை சார்பாக தோழர். R. லோகநாதன் அவர்களும் வேலை அறிக்கை சமர்ப்பித்தனர்
பெருந்துறை கிளை நிதி நிலை அறிக்கையை பொருளாளர் தோழர்.ராமகோடிராஜன் சமர்ப்பித்தார். விவாதங்களுக்கு பின்னர் இரண்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
புதிய நிர்வாகிகள் தேர்வை மாவட்டத் தலைவர் தோழர். மாணிக்கம் அவர்கள் நடத்தி வைத்தார். புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தோழர். இத்ரீஸ் மாநில செயலாளர் TNTCWU, தோழர். மாணிக்கம் மாவட்ட தலைவர் AIBDPA ஆகியோர் பேசினார்கள்.
கிளை சங்கங்களின் சார்பாக மாவட்ட மாநாடு நிதியாக பெருந்துறை கிளை ரூபாய். 10,000, சென்னிமலை கிளை சார்பாக ரூபாய்.7500ம் மாவட்டத் தலைவரிடம் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சங்கம் கிளைகளின் நிறைவு மாநாடு 18 வது கிளை மாநாடு மன நிறைவுடன் நடைபெற்றது.
மாவட்ட சங்கம் கிளை மாநாடுகள் எப்படி நடக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது மாநாடு. புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மாவட்ட சங்கம் சார்பில் வாழ்த்துக்கள். மாநாடு சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்த தோழர்கள் ஈஸ்வரன், ராமகோடிராஜன் மயில்சாமி மாவட்ட சிறப்பு அழைப்பாளர் தோழர். C.மணி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்க உறுப்பினர்கள், தோழர் இத்ரீஸ் உட்பட அனைவருக்கும் பாராட்டுக்கள்.
0 Comments