எழுச்சியாக நடைபெற்ற தூடி மேற்கு கிழக்கு கிளைகளின் மாநாடுகள் & சங்க அமைப்பு தினம்.
October 21, 2023
சிறப்பாக நடைபெற்ற AIBDPA தூத்துக்குடி மாவட்டம் சார்பில் 15 வது சங்க அமைப்புதின கொடியேற்றம் & தூடி மேற்கு கிழக்கு கிளைகளின் மாநாடுகள்.
தோழர்களே ! தோழியர்களே !!அனைவருக்கும் வணக்கம்.
நமது AIBDPA சங்கத்தின் 15வது அமைப்பு தினத்தை முன்னிட்டு 21.10.2023 காலை 1030 மணி அளவில் தூத்துக்குடி பொது மேலாளர் அலுவலகம் முன்பு உள்ள கொடி கம்பத்தில் மாவட்டத் தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் அவர்கள் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் லட்டு, வடை, டீ வழங்கப்பட்டது.
கொடி ஏற்றம் முடிந்தவுடன் தூத்துக்குடி பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள BSNLEU சங்க அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மேற்கு & கிழக்கு கிளைகளின் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்டத் தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் அவர்கள் தலைமை தாங்கினார். அஞ்சலி மற்றும் வரவேற்புரையை தூத்துக்குடி மேற்கு கிளைச் செயலர் தோழர். S. தளவாய் பண்டியன் நிகழ்த்தினார்.
மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலர் தோழர். P. ராமர் துவக்க உரை ஆற்றினார். மாவட்ட ஆலோசகர் தோழர். T.K. ஶ்ரீனிவாசன், BSNLEU மாவட்டத் தலைவர் தோழர். M ஜெயமுருகன், BSNLEU மாவட்ட செயலர் தோழர். G. ஶ்ரீதரன், மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன், கோவில்பட்டி கிளைச் செயலர் தோழர். S. ஆறுமுகம், TNTCWU மாவட்ட செயலர் தோழர். ஹெலன் ஷீபா ஜோசப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தூத்துக்குடி மேற்கு கிளைச் செயலர் தோழர். S. தளவாய் பண்டியன் செயல்பாட்டு அறிக்கையை தாக்கல் செய்தார். தூத்துக்குடி மேற்கு கிளைப் பொருளாளர் தோழர். P. அரிகிருஷ்ணன் நிதிநிலை அறிக்கையை முன் வைத்தார்.
புதிய நிர்வாகிகள் தேர்வை மாவட்ட செயலர் தோழர். P. ராமர் நடத்தினார். *தூத்துக்குடி மேற்கு பகுதி கிளைத்தலைவராக தோழர். சுவாமி பரமஹம்சர், கிளைச் செயலராக தோழர். S. தளவாய் பண்டியன், கிளைப் பொருளாளர் தோழர். P. அரிகிருஷ்ணன் உள்ளிட்ட 11 தோழர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.*
*தூத்துக்குடி கிழக்கு பகுதி கிளைத்தலைவராக தோழர். S.அப்துல் ரஹ்மான், கிளைச் செயலராக தோழர். S. அந்தோணி முத்து, கிளைப் பொருளாளர் தோழர். S. ராஜாமணி உள்ளிட்ட 11 தோழர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.*
மதிய உணவிற்கு தூத்துக்குடி மேற்கு கிளைச் செயலர் தோழர். S. தளவாய் பண்டியன் ரூபாய். 2000/- நன்கொடை வழங்கினார். NCCPA AIC 4வது மாநாட்டுக்கு தோழர்கள் T.K. ஶ்ரீனிவாசன், T. சுப்பிரமணியன், சுவாமி பரமஹம்சர், S. அந்தோணி முத்து, P. ராமச்சந்திரன் உள்ளிட்ட பல தோழர்கள் நன்கொடை வழங்கினர். DLC (உயிர் வாழ்சான்று) பதிவு செய்ய நமது சங்கத்தின் மூலம் புதிய கருவி வாங்கி பயன்படுத்திட மாவட்டத் தலைவர் தோழர். T. சுப்பிரமணியன், மேற்கு கிளைச் செயலர் தோழர். S. தளவாய் பண்டியன் ஆகியோர் தலா ரூபாய்.1000/- நன்கொடை வழங்கினர்.
மாநாடு சிறப்பாக அமைய ஏற்பாடுகள் செய்த தோழர்கள். K. கணேசன், S. தளவாய் பண்டியன், S. ராஜாமணி, சுகுமார் தேவதாஸ் மற்றும் கிளை முன்னணி தோழர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செயல்பாட்டு அறிக்கை, நிதிநிலை அறிக்கை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் மாட்டை சிறப்பாக நடத்திய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்களுக்கும் நன்றியுடன் பாராட்டுக்களை மாவட்டச் சங்கம் தெரிவிக்கிறது.
நிறைவாக தூத்துக்குடி கிழக்கு பகுதி கிளைச் செயலர் தோழர். S. அந்தோணி முத்து நன்றி கூறினார்.
தோழமையுடன் P. ராமர் மாவட்ட செயலர், AIBDPA தூத்துக்குடி மாவட்டம்.
0 Comments