கோவை மாவட்டம் கவுந்தப்பாடி AIBDPA 5வது கிளையின் மாநாடு.
October 20, 2023
கோவை மாவட்டம் கவுந்தப்பாடி AIBDPA 5வது கிளையின் மாநாடு,
தோழர்களே ! வணக்கம். கோவை மாவட்டம் கவுந்தப்பாடி AIBDPA 5வது கிளையின் மாநாடு, தொலைபேசி நிலையத்தில் தோழர். S. மொகமது கவுஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மூத்த தோழர். இராமலிங்கம் SDE அவர்கள் நமது சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். தோழர் M மோகன்ராஜ் SDE அவர்கள் அஞ்சலி உறை நிகழ்த்தினார்.
தோழர். P. சின்னச்சாமி மாவட்ட செயலாளர் அவர்கள் மாநாட்டைத் துவக்கி வைத்தார். செயலாளர் முன்வைத்த செயல்பாட்டு அறிக்கை, மற்றும் நிதி நிலை அறிக்கையை உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்,.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த முறை இருந்தவர்கள், மீண்டும் அப்படியே தேர்வு செய்யப்பட்டனர். வாழ்த்துரை, தோழர் C பரமசிவம் மாவட்ட உதவி தலைவர், தோழர் S அய்யாசாமி,.தோழர் N பழனிச்சாமி,. EB CITU மாவட்ட செயலாளர் தோழர் பெரியசாமி,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் தோழர். P P பழனிச்சாமி வாழ்த்தினார்கள்,.
மூத்த தோழர் ஆலிஸ் தமிழ் செல்வி ராணி அவர்கள் நமது கிளை செயல்பாடுகளை பார்த்து நிதி ரூபாய் 500/- கொடுத்து, சரியான நேரத்தில் மாநாடு துவங்கி நடைபெற வேண்டும் என்று வாழ்த்தி பேசினார்கள் ,
நமது தோழர்கள் மனமுவந்து வழங்கிய ரூபாய் 5000/- மாவட்ட மாநாடுக்கு முதல் தவணையாக தோழர். M. குருசாமி அவர்கள், மூத்த தோழர். C. விஸ்வநாதன் அவர்களிடம் வழங்கினார் மாநாட்டில் 37 தோழர்கள் கலந்து கொண்டனர்...
தோழர் C பழனிச்சாமி கிளை பொருளாளர் நன்றி கூறி முடித்து வைத்தார்,,
தோழர்களே நமது கிளை மாநாடு வெற்றி அடைவதற்கு அயராது பணி ஆற்றிய தோழர் சி பழனிச்சாமி, TNTCWU தோழர் ரெங்கசாமி,. ஆகியோர்களுக்கு மிகுந்த நன்றிகள்,
மாநாடு நடப்பதற்குBSNLEU தோழர் ஜெயகிருஷ்ணன் JTO அவர்கள் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று கொடுத்தார். நமது மூத்த தோழர்கள் உள்பட அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..????
எம் நடராஜன் கிளைச் செயலாளர் AIBDPA கவுந்தப்பாடி ,,,.....
0 Comments