Latest

10/recent/ticker-posts

CGM மற்றும் CCA அலுவலக அதிகாரிகளுடன் AIBDPA தமிழ் மாநிலத்தலைவர்கள் சந்திப்பு !

CGM மற்றும் CCA அலுவலக அதிகாரிகளுடன் AIBDPA தமிழ் மாநிலத்தலைவர்கள் சந்திப்பு !

வணக்கம் தோழர்களே !
                      இன்று (06-09-2022) தோழர். C. K. நரசிம்மன் மாநில தலைவர் அவர்களும், தோழர். S. நடராஜா மாநில பொருளாளர் அவர்களும் கீழ்க்கண்ட அதிகாரிகளை சந்தித்தனர்.

              A) CGM (O) அலுவலகத்தில் PGM (FINANCE) அவர்களையும் DGM (FINANCE ) அவர்களையும் சந்தித்து மாநிலம் முழுவதும் மருத்துவ பில் பட்டுவாடா மற்றும் அதன் மீதான சில பிரச்சினைகள் குறித்தும் பேசினார்கள்.

1) தற்போது வந்துள்ள மெடிக்கல் பில் பட்டுவாடாவிற்காக ERP யில் ஏற்றுவது உள்பட விரைவாகவும் எந்தவித விடுபடுதல் இன்றியும் உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக விருதுநகர் மற்றும் காரைக்குடி மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.

           நிர்வாக தரப்பில் நாம் சொன்ன விபரங்களை ஏற்றுக்கொண்டதோடு மாவட்டங்களில் பணிகள் சரியான முறையில் நடைபெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வதாக கூறினார்கள்.

2) மெடிக்கல் பில் பட்டுவாடா செய்யும் போது சிலருக்கு பல்வேறு காரணங்களால் சரியான தகவல்கள் இல்லாததால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மெடிக்கல் பில் பட்டுவாடா ஆகாமல் இருப்பது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனர் என்ற தகவல் உள்ளது. அதனால் அவர்களது விபரம் நமக்கு தரப்பட்டால் நாம் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் விபரம் பெற்று அவர்களுக்கு பில் பட்டுவாடா முறையாக நடக்க ஏற்பாடு செய்வோம் என்று கூறினோம். நிர்வாகம் அதனை ஏற்றுக்கொண்டு விபரங்களை தருவதாக கூறி உள்ளது.

                        மெடிக்கல் பில் பட்டுவாடா குறித்து மாவட்டங்களில் ஏதாவது பிரச்சினை இருப்பின் மாவட்ட செயலாளர்கள் உடனடியாக மாநில சங்கத்தினை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

              B) CCA அலுவலகத்தில் DY CCA அவர்களையும் JT CCA அவர்களையும் சந்தித்து பல மாவட்டங்களில் உள்ள நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் இருந்த குடும்ப ஓய்வூதிய பிரச்சினைகள் மற்றும் வேறு சில பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டது.

                     குடும்ப ஓய்வூதியம் உள்பட சில பிரச்சினைகளில் தீர்வு காணப்பட்டது. விபரம் அந்தந்த மாவட்டங்களில் தெரிவிக்கப்பட்டது.

தோழமையுடன்,
R.ராஜசேகர், மாநில செயலாளர்,

AIBDPA,
தமிழ் மாநிலம்.
06-09-2022.

Post a Comment

0 Comments