Latest

10/recent/ticker-posts

தோழர் வி ஆர் சி க்கு கண்ணீர் அஞ்சலி

தோழர் வி ஆர் சி க்கு கண்ணீர் அஞ்சலி



தோழர்களே

தோழர் வி ஆர் சி க்கு அஞ்சலி

           வி ஆர் சி என்று நம்மால் அழைக்கப்பட்ட தோழர் வி ஆர் சந்திரசேகர் தமிழக லைன் ஸ்டாப் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர். NFTE – E4 சங்கத்தில் கோவை மாவட்ட செயலாளராக முக்கிய பங்காற்றியவர். பின்னர் தொழிற்சங்க ஜனநாயக பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்ட போது அதன் தலைமையில் இருந்து செயல்பட்டவர்.

          பின்னர் ITEU சங்கத்தின் பொதுச்செயலாளராக நம்முடைய லைன்ஸ்டாப் சங்கத் தோழர்களுக்கு தலைமை தாங்கியவர். 1990களில் டெலிகாம் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க அரசு முற்பட்டபோது அதனை எதிர்த்த இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். உடல் நலக்குறைவின் காரணமாக அகால மரமடைந்துள்ளார். அவர் AIBDPA சங்கத்தின் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆர் ராஜசேகர் மாநில செயலர்
10-9-2022

Post a Comment

0 Comments