மெடிக்கல் பில் தொடர்பான மாவட்ட மட்ட பிரச்சனைகள் தீர்விற்கு !!
September 10, 2022
மெடிக்கல் பில் தொடர்பான மாவட்ட மட்ட பிரச்சனைகள் தீர்விற்கு !!
தோழர்களே,
BSNL நிர்வாகம் 30-8-2022 அன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு மெடிக்கல் பில் பட்டுவாடா சம்பந்தமாக சுற்றறிக்கை வெளியிட்டது. நாமும் மாநில சங்கத்தின் சார்பாக உடனடியாக மாநில நிர்வாகத்தை அணுகி இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தோம். அவர்களும் ஒப்புக் கொண்டு மாவட்டங்களுக்கு வழிகாட்டுதல் கொடுத்துள்ளனர். மேலும் நமது மத்திய சங்கமும் BSNL நிர்வாகத்தற்கு கடிதம் எழுதியுள்ளது.
மாவட்ட செயலாளர்களை உடனடியாக அந்தந்த மாவட்ட நிர்வாகத்தை அணுகி பிரச்சனைகளை எடுக்கச் சொல்லி இருந்தோம். அதில் வரும் பிரச்சனைகள்:-
1) பல மாவட்டங்களில் மெடிக்கல் பில் ERP ல் ஏற்றுவது தொடர்பாகவும் பிரச்சனைகள் வந்துள்ளன.
2) மெடிக்கல் அலவன்ஸ் ERPல் ஏற்றுவதிலும் குறிப்பாக 2019 20 அல்லது 2020 21 இந்த ஆண்டுகளில் தொழில்நுட்ப பிரச்சனைகள் உருவாகி விடுகின்றன.
3) VRSல் சென்றவர்களுடைய மெடிக்கல் பில் அப்டேட் பண்ணுவதிலும் பிரச்சனைகள் வருகின்றன.
4) பல இடங்களில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக இந்த பணிகளில் தாமதமாக உள்ளது.
5) ஒரு சில இடங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை.
6) கடந்த முறை திருப்பி அனுப்பப்பட்ட மெடிக்கல் பில்/ அலவன்ஸ் தொடர்பான பிரச்சினைகளும் தொடர்கிறது.
எனவே நாம் இந்த பிரச்சனையை மாநில நிர்வாகத்தோடு பேசுவது என முடிவெடுத்து இருக்கிறோம். மாவட்டங்கள் தலமட்டத்தில் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மாநில சங்கத்திற்கு உடனடியாக காலதாமதம் இன்றி எழுத்துப் பூர்வமாக வாட்ஸப்பில் மாநில சங்கத்திற்கு நாளை (11-9-22) மாலைக்குள் தகவல் கொடுக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். தோழர்கள் தயவு செய்து இப் பிரச்சனையில் காலதாமதம் வேண்டாம்.
தோழமை வேண்டுகோளுடன் ஆர் ராஜசேகர், மாநில செயலர். 10 9 22
0 Comments