Latest

10/recent/ticker-posts

மெடிக்கல் பில் பணப் பட்டுவாடா துவங்கியது - தமிழகத்தில்

மெடிக்கல் பில் பணப் பட்டுவாடா துவங்கியது தமிழகத்தில்-

 

தோழர்களே,

            நமது சங்கத்தின் பெருமுயற்சிக்கு பிறகு மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் மெடிக்கல் பில்கள்
ERP – ல் பதிவேற்றம் செய்யும் பணிகள் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. சில மாவட்டங்களில் மெத்தனமும், ஒத்துழைப்பின்மையும் நீடிக்கிறது.

          இப் பிரச்சனைகளுக்கு இடையேயும் ஒரு சில மாவட்டங்களில் மெடிக்கல் அலவன்ஸ் பேமெண்ட் துவங்கி உள்ளது. உற்சாகத்தோடு நமது தோழர்கள் நேற்று இரவு தகவல்களை தெரிவித்துள்ளனர். நீண்ட நாள் காத்திருப்பிற்கான, நியாயமாகச் சேரவேண்டிய பலன் கையில் கிடைக்கின்ற பொழுது அடைகின்ற உற்சாகமும் அளவற்றது தானே. ஆனால் அத்தோடு நிறுத்தி விடக் கூடாது. இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் மாவட்ட செயலாளர்கள் உடனடியாக மாவட்ட மட்டத்தில் தலையிட வேண்டும். பிறகு மாநில சங்கத்திற்குத் தகவல் தர வேண்டும். அப்பொழுதுதான் நாங்கள் தலையிடுவதற்கு ஏதுவாக இருக்கும். இந்த மருத்துவ பில் பட்டுவாடா பிரச்சனையில் இறுதி உறுப்பினர் ஒருவருக்குக் கிடைக்கின்ற வரை, நாம் விழிப்போடு இருந்து பணியாற்றுவோம். போராட்டத்தின் பலன்களை முழுமையாக நமது உறுப்பினர்களுக்குக் கொண்டு சேர்ப்போம். .

தோழமையுடன்,
*ஆர்.ராஜசேகர்*
*மாநிலச் செயலாளர்*
*15.09.22*

Post a Comment

0 Comments